பற்றி எரிந்த ஹரியானா.. வன்முறையின் பின்னணியில் பாகிஸ்தான் யூடியூபர்? வெளியான ஷாக் தகவல்
சண்டிகர்: ஹரியானாவில் ஏற்பட்ட வன்முறை தற்போது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. வன்முறையின் பின்னணியில் உள்ளவர்களை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த பிரபல யூடிபூர் அஹ்சன் மேவதி பற்றி எரிந்த ஹரியானா வன்முறைக்கு எண்ணெய் ஊற்றும் வகையிலான செயலில் ஈடுபட்டு இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஹரியானாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார். இந்நிலையில் தான் நூ மாவட்டம் கேட்லா மோட் பகுதியில் கடந்த 31ம் தேதி விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளத்தை சேர்ந்தவர்கள் ஊர்வலம் சென்றனர் இந்த ஊர்வலத்தில் கல்வீசப்பட்டது.

இதையடுத்து இருதரப்பினர் மோதிக்கொண்ட நிலையில் வன்முறை வெடித்தது. வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. தற்போது வரை 6 பேர் பலியாகி உள்ளனர். அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டு வருகிறது.
இதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நூ, பரிதாபாத், பல்வால் உள்பட 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்டு 5 வரை இணைய சேவைகள் தடை செய்யப்பட்டு உள்ளன. மொத்தம் 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நூ மாவட்ட எஸ்பியாக உள்ள வருண் சிங்லா அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் நூ மாவட்டத்தில் இருந்து பீவானி மாவட்டத்துக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக நூ மாவட்ட எஸ்பியாக நரேந்திர பீஜார்னியா நூ மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் வன்முறைக்கு பின்னணியில் உள்ள நபர்களை போலீசார் கைது செய்யும் முனைப்பில் செயல்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக இந்த வன்முறைக்கு முதன்மை காரணம் என்பது சில வீடியோக்கள் தான் என கூறப்படுகிறது. அதாவது பஜ்ரங் தள உறுப்பினரான மோனு மனேசர் முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. பஜ்ரங் தளத்தை சேர்ந்த இவர் பசு பாதுகாவலராக தன்னை அடையாளப்படுத்தி கொள்கிறார். மேலும் 2 முஸ்லிம்களை அவர் கொலை செய்ததாக வழக்கும் உள்ளது.
இத்தகைய சூழலில் தான் மோனு மனேசர் வெளியிட்ட வீடியோ தான் வன்முறைக்கு காரணமாக கூறப்படுகிறது. அதேபோல் ஃபரிதாபாத்தின் பசு பாதுகாவலராக அறியப்படும் பிட்டு பஜ்ரங்கி வெளியிட்ட வீடியோவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ஒருபுறம் இருக்க ஹரியானா வன்முறையில் பின்னணியில் பாகிஸ்தான் யூடியூபர் அஹ்சன் மேவதி வெளியிட்ட வீடியோவும் முக்கிய காரணமாக இருப்பதாக ‛இந்தியா டூடே' செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது அஹ்சன் மேவதி, பசு பாதுகாவலராக இருக்கும் மோனு மனேசரை கொல்லும்படி முஸ்லிம் மக்களுக்கு கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். வன்முறை நடந்த ஜூலை 31ம் தேதியில் இந்த வீடியோ வெளியானது. இது பற்றி எரிந்த வன்முறையில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்திருந்தது. அஹ்சன் மேவதி பாகிஸ்தானில் வசித்து வரும் நிலையில் அவர் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் இருப்பதாக தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதனால் அவருக்கு எதிராக பலரும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர் அஹ்சன் மேவதியை கைது செய்ய வேண்டும் ஹரியானா போலீசாருக்கு சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை வைத்தனர்.
இதற்கிடையே தான் ‛இந்தியா டூடே' அஹ்சன் மேவதி பற்றிய விபரங்களை சேகரிக்க தொடங்கியது. அப்போது அவர் பாகிஸ்தானின் பஞ்சாப்பில் காரோர் பாகா பகுதியில் இருப்பது தெரியவந்தது. மேலும் இவர் அங்கு பிரபல யூடியூபராக உள்ளதும் தெரியவந்தது. மேலும் அந்த செய்தி நிறுவனம் சார்பில் அவரிடம் பேசப்பட்டது. அப்போது தான் இந்தியாவுக்கு இதுவரை வந்தது இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் தனது முன்னோர்கள் ராஜஸ்தானின் அல்வாரில் இருந்ததாகவும், பிரிவினையின்போது அவர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவரது சகோதரர் பாகிஸ்தான் காவல் துறையில் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications