Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெஞ்சை பிடித்து சரிந்த காங்கிரஸ் எம்பி.. யாத்திரையில் சோகம்.. "இதுவும் வீரமரணம்தான்".. கலங்கிய கமல்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ராகுல் காந்தியின் பாரத் ஜடோ யாத்திரையில் பங்கேற்ற ஜலந்தர் தொகுதியின் காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரி மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு கட்சியின் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கிய பாரத் ஜடோ யாத்திரையானது 10 மாநிலங்கள் 52 மாவட்டங்கள் என 118 நாட்கள் பயணித்து பஞ்சாப் வந்து சேர்ந்திருக்கிறது. இன்று அதிகாலை பஞ்சாப் லுதியானாவின் பில்லூர் பகுதியில் ராகுல் காந்தி தலைமையில் யாத்திரை நடைபெற்றது. இதில் 76 வயதான காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரியும் பங்கேற்றிருந்தார். அப்போது அவர் நடந்து வந்துகொண்டிருக்கையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உடன் பயணித்த கட்சியினர் அவரை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடன் ராகுல் காந்தியும் சென்றிருந்தார். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே,

இரங்கல்

இரங்கல்

"காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரி திடீரென உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளித்துள்ளது. இவரது இழப்பு கட்சிக்கும், இயக்கத்திற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என்று கூறியுள்ளார். அதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், "எம்பி சந்தோக் சிங் சவுத்ரி மாரடைப்பு பாரத் ஜடோ யாத்திரையில் பங்கேற்றிருந்தபோது திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு ஆழந்த இரங்கல். இவரது மறைவையடுத்து யாத்திரையில் சிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்" என்று கூறியுள்ளார்.

 கமல்ஹாசன்

கமல்ஹாசன்

கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "இன்று அதிகாலை பாரத் ஜடோ யாத்திரையில் பங்கேற்றிருந்த எம்பி சந்தோக் சிங் சவுத்ரி திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாழும் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கல். இவரது மறைவு ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பாகும்" என்று கூறியுள்ளார். அதேபோல மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், "இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் போது மறைந்த ஜலந்தர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சந்தோக் சிங் சவுத்ரிக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுவும் ஒரு வீரமரணம்தான். நீங்கள் என்றென்றும் நினைவுகூரப்படுவீர்கள்" என்று கூறியுள்ளார்.

 ராகுல் காந்தி

ராகுல் காந்தி

யாத்திரையில், எம்பி சந்தோக் சிங் மயங்கி விழுந்ததிலிருந்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டது வரை உடன் இருந்த ராகுல் காந்தி, சந்தோக் சிங்கின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் "இவரது திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. இளைஞர் காங்கிரஸ் பின்னர் உள்ளூர் அளவில் தலைவர் என அடிமட்டத்திலிருந்து உழைத்து எம்பியாக உருவானவர். மட்டுமல்லாது இவர் காங்கிரஸ் குடும்பத்தில் வலுவான தூணாக இருந்தவர். இவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்று கூறியுள்ளார்.

 யாத்திரை

யாத்திரை

அதேபோல மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.வரும் 31ம் தேதியுடன் யாத்திரை முடிவடைய உள்ள நிலையில், தற்போது எம்பி ஒருவர் உயிரிழந்திருப்பது காங்கிரஸில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாத்திரை முடிவடைய இன்றும் 68 கி.மீ மட்டுமே மீதம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+