‛நிர்வாண வீடியோ இருக்கு’.. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை மிரட்டிய முதல் மனைவி.. மகளும் பரபர புகார்
சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது முதல் மனைவியின் 2 குழந்தைகளையும் கவனிக்க தவறியதாக மகள் பரபரப்பான வீடியோ வெளியிட்டு குற்றம்சாட்டி உள்ளார். இதன் தொடர்ச்சியாக பகவந்த் மான் நிர்வாணமாக இருப்பது, மதுபானம் குடிக்கும் வீடியோவை வெளியிடுவதாக விவாகரத்து பெற்ற முதல் மனைவி பிரீத் கிரிவால் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பகவந்த் மான் உள்ளார். இவரது முதல் மனைவியின் பெயர் பிரீத் கிரிவால். பகவந்த் மான் தனது முதல் மனைவி பிரீத் கிரிவாலை பிரிந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெறப்பட்டது.

பகவந்த் மான் மற்றும் அவரது முதல் மனைவிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விவாகரத்துக்கு பிறகு பகவந்த் மானின் முதல் மனைவி தனது 2 குழந்தைகளுடன் இங்கிலாந்தில் வசித்து வருவதாக கூறப்படுகிது.
இந்நிலையில் தான் பஞ்சாப் முதல்வரான நிலையில் கடந்த ஆண்டு பகவந்த் மான் 2வது திருமணம் செய்தார். டாக்டரான குர்ப்ரீத் கவுர் என்பவரை பகவந்த் மான் கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் சண்டிகரில் உள்ள பகவந்த் மானின் வீட்டில் வைத்து எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட சில தலைவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இந்நிலையில் தான் பகவந்த் மான் மீது அவரது முதல் மனைவி பிரீத் கிரிவாலின் மகள் சீரத் கவுர் கடுமையாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பான வீடியோவை சிராமணி அகாலிதளம் கட்சியின் தலைவர் பீக்ராம் மஜிதியா நேற்று வெளியிட்டு இருந்தார்.
அதில் பகவந்த் மானின் மகள் சீரத் கவுர், ‛‛நான் தந்தை என அழைக்கும் உரிமையை பகவந்த் மான் இழந்துள்ளார். அவரை முதல்வர் என்றே அழைக்க வேண்டும். நாங்கள் மவுனமாக இருப்பதால் தான் அவர் உயர் பதவியில் உள்ளார். ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில் அவரது 2வது மனைவி கர்ப்பமாக உள்ளார். எங்கள் 2 பேரை புறக்கணித்து கைவிட்ட நிலையில் 3வது குழந்தையை பெற்றெடுப்பது ஏன'' என கேள்வி எழுப்பி இருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே தான் அகலிதளம் தலைவர் பீக்ராம் மஜிதியா, ‛பகவந்த் மான் தனது முதல் மனைவியின் 2 குழந்தைகளுக்கு தந்தையாக செய்யும் பொறுப்புகளை செய்யவில்லை. தொடர்ந்து அவர் இதனை கடைப்பிடிக்கும் நிலையில் நான் அவர்களுக்கு வளர்ப்பு தந்தையாக இருந்து பகவந்த் மான் செய்ய வேண்டிய பொறுப்புகளை செய்வேன்'' என்றார்.
இந்நிலையில் தான் தற்போது பீக்ராம் மஜிதியா 2வது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் பகவந்த் மானின் முதல் மனைவியான பிரீத் கிரிவால், பகவந்த் மானின் நிர்வாண போட்டோ மற்றும் அவர் மதுபானம் குடிக்கும் போட்டோக்களை வெளியிடுவதாக கூறியுள்ளார். இது தற்போது பஞ்சாப் அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications