சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. களத்தில் திணறும் "எஸ்எஸ்எம்".. பஞ்சாப் பரபரப்பு

பஞ்சாப் தேர்தல் பிரச்சாரத்தில் விவசாய கட்சிகள் திணறி கொண்டிருக்கிறது

Google Oneindia Tamil News

சண்டிகர்: அவசர அவசரமாக கட்சியை ஆரம்பித்துவிட்டு, அதை எப்படி வெற்றி பெற வைப்பது என்று தெரியாமல் திணறி கொண்டிருக்கிறார்கள் பஞ்சாப் விவசாயிகள்.. விரைவில் ஒட்டுமொத்த விவசாயிகளின் ஆதரவை இந்த கட்சி பெற்றுவிடுமா? என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்த முனைந்துள்ளனர்.

சமீப கால இந்தியாவை பொறுத்தவரை மிகப்பெரிய அளவிலான போராட்ட வடிவம் பெற்றது டெல்லியில் நடத்திய விவசாயிகளின் போராட்டம்தான்.

வருடக்கணக்கில் போராட்டம் நடத்தினர்.. 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய மத்திய அரசு, இறுதியில் விவசாயிகளின் கோரிக்கைக்கு பணிந்தது.. விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற்றது மத்திய அரசு!

திண்டுக்கல் ஒரு தினுசுதான்.. வ.உ.சி., வேலுநாச்சியார் வேடத்துடன் வந்தால் 2 சிக்கன் பிரியாணி இலவசம்! திண்டுக்கல் ஒரு தினுசுதான்.. வ.உ.சி., வேலுநாச்சியார் வேடத்துடன் வந்தால் 2 சிக்கன் பிரியாணி இலவசம்!

தேர்தல்

தேர்தல்

இதனிடையே, விவசாயிகள் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோதே, தேர்தல் நடைபெற்ற மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக விவசாய அமைப்புகள் பிரசாரம் செய்தன.. ஆனால், விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்று விட்டதால் அதன் பிறகு அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம், அரசியலில் இருந்து ஒதுங்கியே இருப்போம் என்று கூறியிருந்தன விவசாய அமைப்புகள்..

நன்மதிப்பு

நன்மதிப்பு

என்ன நினைத்ததோ தெரியவில்லை.. விவசாயிகள் போராட்டம் உலக அளவில் பிரபலம் அடைந்ததை வைத்தும், விவசாயிகளுக்கு இப்போதுவரை மக்களிடையே நன்மதிப்பும் இருப்பதை அறிந்தும், விவசாய அமைப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து புதிய கட்சியை ஆரம்பித்தனர்.. விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடிய 32 அமைப்புகளில் 22 அமைப்புகள் ஒன்றிணைந்து புதிய கட்சியை தொடங்கியிருந்தனர்.

 கிராமப்பகுதிகள்

கிராமப்பகுதிகள்

இந்த கட்சிக்கு சம்யுக்த் சமாஜ் மோர்ச்சா (எஸ்எஸ்எம்) என்று பெயரிட்டனர்.. இந்த கட்சி வரும் பஞ்சாப் தேர்தலில் போட்டியிடும் என்றும் அறிவித்தனர்.. பஞ்சாபின் 117 தொகுதிகளிலும் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்துக்கும் வந்திருக்கின்றனர்.. ஆனால், பாரம்பரிய கட்சிகள் போல தங்களால் செயல்பட முடியாமல் போவதை அவர்கள் களத்துக்கு வந்துதான் லேசாக உணர ஆரம்பித்துள்ளனர்.. இந்த கட்சிக்கு கிராமப்பகுதிகளில் நிறைய செல்வாக்கு இருக்கிறது.. ஆனாலும், நகரப்பகுதிகளில் அந்த அளவுக்கு வரவேற்பு இல்லையாம்.. அதனால், தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட முடியாமல் திணறி கொண்டிருக்கிறது.

 விவசாய சங்கங்கள்

விவசாய சங்கங்கள்

22 விவசாய சங்கங்களுள் ஒன்றான அனைத்திந்திய கிசான் சபாவின் மாநில துணைத் தலைவர் லக்பிர் சிங் நிஜம்புரா இதை பற்றி சொல்லும்போது, "எங்களுக்கான பின்புலம் என்பது முற்றிலும் கிராமப்பகுதிகள்தான்.. நகரப்பகுதி வாக்காளர்கள் அவர்களின் பிரச்னைகளை நாங்கள் உணர்ந்திருக்க மாட்டோம் என்று நினைக்கிறார்கள்.. நகரப் பகுதி தொகுதிகளில் போட்டியிடுவதற்கு முன்பே எங்கள் தலைவர்கள் இது குறித்து சிந்தித்து பார்த்திருக்க வேண்டும்.

 தொலைநோக்கு பார்வை

தொலைநோக்கு பார்வை

எங்கள் கட்சியின் சார்பாக நகர பகுதிகளில் போட்டியிட தொழிலதிபர்கள், பெரிய விவசாயிகள், வணிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.. ஆனாலும், அமைப்பு ரீதியாக பலம்வாய்ந்த பெரிய கட்சிகளைபோல பிரச்சாரம் மேற்கொள்ளும் திறன் தங்களிடம் இல்லை என்பதை அவர்கள் தற்போது உணர்ந்துள்ளனர்... இந்த கட்சி, ஒரு விவசாயிகளின் இயக்கம் கிடையாது... இது ஒரு சமூக இயக்கம். எங்களின் கொள்கையும், தொலைநோக்கு பார்வையும் புரிந்து கொண்ட மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அதே போல நகரப் பகுதியினருக்கென பிரச்சனைகளும் இருக்கின்றன... அதையெல்லாம் களைய வேண்டி உள்ளது" என்றார்.

பஞ்சாப்

பஞ்சாப்

உண்மையை சொல்லப்போனால், இந்த எஸ்எஸ்எம் கட்சி ஆரம்பிக்கும்போது, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் சற்று கலக்கமடைந்துவிட்டன.. பஞ்சாப்பின் பெரும்பான்மையான வாக்குகளாக விவசாயிகளின் ஓட்டுக்களை இந்த கட்சி பிரித்து தன் பக்கம் விழ வைத்துவிடுமோ என்ற எண்ணத்தையும் தோற்றுவித்தன.. ஆனால், நோக்கம் சரியாக இருப்பினும், வர்த்தக மற்றும் பிரச்சார ரீதியாக தேர்தலை எதிர்கொள்ள முடியாமல் திணறி கொண்டிருக்கிறது..

Recommended Video

    Punjab Assembly Election 2022: Who is Bhagwant Mann | AAP CM Candidate
     ஆம் ஆத்மி

    ஆம் ஆத்மி

    ஒருவேளை ஆம் ஆத்மி கட்சியுடன் சமாஜ் மோர்ச்சா கைகோர்க்கும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது.. இந்த தகவலை அன்றைய தினம் விவசாய அமைப்புகள் மறுத்திருந்தாலும், கடைசி கட்டத்திலாவது தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டால் நல்லா இருக்குமே என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.. பஞ்சாப்பில் பாஜகவை முந்திக் கொண்டு ஆம் ஆத்மி எழுச்சி பெற்று வரும் நிலையில், எஸ்எஸ்எம் கட்சி, இதை சற்று பரிசீலித்து பார்க்குமா?!

    English summary
    SSM Party in Punjab Assembly Election 2022: அவசர அவசரமாக கட்சியை ஆரம்பித்துவிட்டு, அதை எப்படி வெற்றி பெற வைப்பது என்று தெரியாமல் திணறி கொண்டிருக்கிறார்கள் பஞ்சாப் விவசாயிகள்.. விரைவில் ஒட்டுமொத்த விவசாயிகளின் ஆதரவை இந்த கட்சி பெற்றுவிடுமா? என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்த முனைந்துள்ளனர்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X