Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடிக்கவே மாட்டேன்! அம்மா மீது சத்தியம்! மேடை மீது தள்ளாடிய பஞ்சாப் புது முதல்வர்! வரலாறு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற உள்ள நிலையில் புதிய முதல்வராக பகவன் சிங் மன் பதவி ஏற்க இருக்கிறார். இவர் காமெடியன், நன்றாக பேச கூடியவர், எம்பி என்பதை எல்லாம் தாண்டி.. இவருக்கு எதிராக குடி பழக்க புகார்களும், சர்ச்சைகளும் பல உள்ளன.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி 91 இடங்களில் முன்னிலை வகிக்கிறது; காங்கிரஸ் கட்சி 71 இடங்களில் முன்னிலை வகிக்கிறது; அகாலிதளம் 9 இடத்தில் முன்னிலையில் உள்ளது. பாஜக கூட்டணி 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இதன் மூலம் ஆம் ஆத்மி சார்பாக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பகவன் சிங் மன் அம்மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

பஞ்சாப் முதல்வர்

பஞ்சாப் முதல்வர்

பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக பகவன் சிங் மன் அறிவிக்கப்பட்ட போதே அது ஆம் ஆத்மி கட்சியின் மிகப்பெரிய மாஸ்டர் ஸ்டிரோக் போல பார்க்கப்பட்டது. ஏனென்றால் மக்கள் மத்தியில் இவர் பிரபலமாக இருந்தார். 2014 லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி பஞ்சாப்பில் 4 இடங்களை வெல்ல இவர் முக்கிய காரணமாக இருந்தார். பஞ்சாப்பில் ஜாட் சிங் குடும்பத்தில் வசதியான பின்னணியோடு பிறந்த பகவன் சிங் மன்னுக்கு லட்சக்கணக்கில் சொத்துக்கள் உள்ளது.

பகவன் சிங் மன்

பகவன் சிங் மன்

இவர் காமெடியன், மேடைகளில் ஏறி ஸ்டான்ட் அப் காமெடி செய்தவர் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அதெல்லாம் தாண்டி இவரின் அப்பாவிற்கு இருக்கும் அரசியல் ஆர்வம் காரணமாக சிறு வயதில் இருந்தே இந்திய அரசியல் பற்றி படித்தார். வடஇந்திய அரசியல் மட்டுமல்ல தென்னிந்திய அரசியலையும் கரைத்து குடித்தவர்
மன். திமுக பற்றி 12 வயது இருக்கும் போதே தான் படித்ததாக ஒரு பேட்டியில் கூட குறிப்பிட்டு இருக்கிறார். அரசியல் வரலாறு, ஸ்டான்ட் அப் காமெடி எல்லாம் இருந்தாலும் இவருக்கு கடுமையான குடி பழக்கமும் இருந்தது.

போதை

போதை

ஆம் இவர் பல முறை பொது மேடைகளில் போதையோடு வந்து பேசி விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். இவர் கையில் மதுக்கோப்பையோடு இருக்கும் புகைப்படங்களும் கூட சில வருடங்களுக்கு முன் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இடையில் 2019ல் அரசியல் கூட்டம் ஒன்றில் இவர் குடி போதையில் தள்ளாடியது பெரிய சர்ச்சையானது. அந்த கூட்டத்தில் இவர் உளறியபடி பேசினார். அந்த வீடியோக்களும் பெரிய சர்ச்சையானது.

பெரிய நம்பிக்கை

பெரிய நம்பிக்கை

இவர் மீது பெரிய நம்பிக்கை வைத்து இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலே.. மன்னின் குடி பழக்கம் காரணமாக அவர் மீது அதிருப்தி அடைந்தார். அவர் குடி பழக்கத்தை விட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தார். பின்னர் மேடை கூட்டம் ஒன்றில் தனது தாய் மீது சத்தியம் செய்து குடிப்பதை நிறுத்துவதாக கூறினார். அதன்பின் இவர் மீது குடி பழக்க புகார்கள் வைக்கப்படவில்லை என்றாலும் இப்போதும் இவரின் இந்த பழக்கத்தை வைத்து எதிர்க்கட்சிகள் இவரை விமர்சனம் செய்து வருகின்றன.

குடிப்பதை

குடிப்பதை

அவர் குடிப்பதை நிறுத்திவிட்டார்.. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அவர் மாறிவிட்டார் என்று கெஜ்ரிவாலே பிரச்சாரம் ஒன்றில் மன்னுக்கு சர்டிபிக்கேட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த குடி பழக்க விமர்சனங்களை கடந்து தற்போது பஞ்சாப்பின் புதிய முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார் பகவன் சிங் மன். சிறு வயதில் இருந்தே காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனம் கொண்டவர் இவர்.

எமர்ஜன்சி

எமர்ஜன்சி

எமர்ஜன்சி மீதான கோபம்.. பொற்கோவில் உள்ளே ராணுவம் சென்றது ஆகியவை ஒரு காரணம். இன்னொரு காரணம் பகத் சிங் மீதான ஈர்ப்பு. காங்கிரசை பகத் சிங் ஏற்றுக்கொண்டதே இல்லை.. நான் மட்டும் எப்படி ஏற்பேன் என்பதுதான் இவர் ஆம் ஆத்மியில் சேர்ந்த பின் சொன்ன கருத்து.. அந்த அளவிற்கு இவருக்கு காங்கிரஸ் என்றாலே ஆகாது. இவரின் மஞ்சள் நிற டர்பனும் பகத் சிங் மீதான அன்பால்தான்.. அந்த அளவிற்கு காங்கிரசை எதிர்த்தவர் இப்போது அதே காங்கிரசை வீழ்த்தி பஞ்சாபில் அரியணையில் அமர உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+