நாட்டை காட்டி கொடுத்த துரோகி.. பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த பிரபல யூடியூபர் கைது.. யார் இவர்?
சண்டிகர்: பாகிஸ்தானுக்காக பஞ்சாபில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் மற்றொரு யூடியூபர் ஜஸ்பீர் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானுக்கும், நமக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.
கடந்த 7 ம் தேதி முதல் 10 ம் தேதி வரை நம் நாடு அடித்த அடியில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள், விமானப்படை தளம், ராணுவ தளம் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் கெஞ்சியதால் இந்த மோதல் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, பாகிஸ்தானுக்காக உளவுப்பார்த்த இந்திய நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது 15க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது பஞ்சாப்பை சேர்ந்த யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஹரியானாவை சேர்ந்த பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டு இருந்தார். இதனால் கைதாகும் யூடியூபர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது கைதாகி உள்ள யூடியூபர் ஜஸ்பீர் சிங் ‛ஜான் மஹால்' என்ற பெயரில் யூடியூப் சேனல் வைத்துள்ளார். மொத்தம் 1.1 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவரை இன்று போலீசார் கைது செய்தனர். உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் மொஹாலி சிறப்பு நடவடிக்கை பிரிவு போலீசார் ஜஸ்பீர் சிங்கை கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவர் ரூப் நகர் மாவட்டத்தில் உள்ள மஹ்லான் கிராமத்தை சேர்ந்தவர். இவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஷகீர் என்ற ஜட் ரந்தாவாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார். அதேபோல், டெல்லியில் உள்ள பாகிஸ்தானும் மாஜி அதிகாரியான எஹ்சான் உர் ரஹீம் என்ற டேனிஷ் உடனும் உறவு வைத்துள்ளார். சமீபத்தில், ஹரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற யூடியூபரை போலீசார் கைது செய்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications