"டிராமா?".. பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகிறாரா சித்து.. அப்செட்டில் அம்ரிந்தர் சிங்
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகிறார் சித்து என்கிறார்கள்
சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது... இந்த விஷயம் அறிந்து முதல்வர் அம்ரிந்தர் சிங் அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருஷம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது... இதையடுத்து இப்போதே அங்கு பஞ்சாயத்து ஆரம்பமாகிவிட்டது..
குறிப்பாக காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டு வருகிறது.. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், மாஜி அமைச்சருமான நவ்ஜோத் சிங் போர்க்கொடி தூக்கியுள்ளார். சித்துவுக்கு ஆதரவாக சில காங்கிரஸ் எம்பிக்களும், சில எம்எல்ஏக்களும் செயல்பட்டு வருகின்றனர்.

முற்றுப்புள்ளி
இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது... எனவே, சித்து பஞ்சாப் மாநில அமைச்சரவையில் இடம்பெற மாட்டார் என்றும், பஞ்சாப் முதல்வராக அம்ரிந்தர் சிங் தொடர்வார் என்றும் அவரை மாற்றும் பேச்சுக்கே காங்கிரஸில் எண்ணமில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

முதல்வர்
சித்துவுக்கு மிக உயர்ந்த பொறுப்பு தருவதில், அமரீந்தர் சிங்குக்கு இஷ்டம் இல்லாத நிலையில், இந்த முடிவானது, முதல்வருக்கும், சித்துவுக்கும் நடுவே எழுந்து வரும் விவகாரத்துக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கப்படும் என்று கட்சித் தலைவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்..

தலைவர்கள்
இதனிடையே, சண்டிகரில் நவஜோத் சித்துவும், பஞ்சாப் அமைச்சர் சுக்ஜன்தர் ராண்டவா, சரஞ்சித் சன்னி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து தமது அணியை அவர் பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.. ஆனால், பேரவை தேர்தலை அமரீந்தர் சிங் தலைமையில் சந்திப்போம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளரும், பஞ்சாப் பொறுப்பாளருமான ஹரீஸ் ராவத் உறுதிபட தெரிவித்துள்ளார்.

அறிவிப்பு
இந்நிலையில் சித்துவின் ஆதரவாளர்கள் இனிப்புவகைகளை வழங்க தொடங்கிவிட்டனர்.. ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும்வரை காத்திருக்கும்படி தொண்டர்களிடம் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் கேட்டுக் கொண்டுள்ளார்... ஒருவேளை 2022-ல் காங்கிரஸ் வெற்றி பெற்றால், அவர்தான் முதல்வராக இருக்க முடியும் என்று ஒரு பேச்சு எழுந்து வருகிறது.












Click it and Unblock the Notifications