கலர்ஃபுல் சோனாலி.. திரண்டு வரும் கூட்டம்.. பிரசாரத்தையும் டிக் டாக் செய்ய போறாராம்!
ஹரியானாவில் பாஜக வேட்பாளராக களம் இறங்குகிறார் சோனாலி பொகட்
Recommended Video
சண்டிகர்: கலர்ஃபுல் சோனாலியை பார்க்க கூட்டம் கூடிவருகிறதாம்.. "பாட்டு மட்டும் இல்லீங்க.. பிரச்சாரத்தைகூட இதே டிக்டாக் வீடியோவில் செய்ய போகிறேன்" என்று அலப்பறை தந்து வருகிறார் சோனாலி பொகத்!
இவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். நிறைய டிவி ஷோக்கள் செய்துள்ளார். அதனால் வடமாநிலத்தில் இவர் மிகவும் பிரபலம்!

இதை தவிர, டிக் டாக் செய்து பிரபலம் ஆனவர். மலையாளம், இந்தி என எல்லா மொழி பாடல்களுக்கும் வாயசைத்து நடித்த டிக்டாக் வீடியோக்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு
எதையுமே புதுசாக அணுகும் பாஜக, இவரது பாப்புலாரிட்டியை வைத்து, நடக்க போகும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிட சீட் தந்துள்ளது. இதனால் ஏகப்பட்ட சந்தோஷத்தில் உள்ளார் சோனாலி.

பாஜக சீட் தந்தது பற்றி கேட்டதற்கு, "தொகுதி மக்களை கவர டிக் டாக் ஆப் மூலமாகவும் பிரச்சாரம் செய்ய போகிறேன், குறிப்பாக தேச பக்தி சம்பந்தமான வீடியோக்களை வெளியிட போகிறேன்" என்கிறார்.

இப்போது இவர் பிரச்சார களத்திலும் குதித்துள்ளார். வீடியோவில் மட்டுமே சோனாலியை பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு இப்போது நேரடியாகவே சோனாலியை பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக, இவரது டிக்டாக் இளசு கூட்டம் முண்டியடித்து கொண்டு வந்து சோனாலியின் பிரச்சாரத்துக்கு வருகிறதாம். இவருக்கு கூடும் கூட்டத்தை பார்த்தால், கண்டிப்பாக எம்எல்ஏ ஆகிவிடுவார் போல தெரிகிறது.

பொதுவாக, பாஜக பெண் அரசியல்வாதிகள் நிறைய பேர் டிக் டாக் செய்துள்ளனர். ஆனால், இவர் டிக் டாக் செய்துவிட்டு அரசியலுக்குள் வருகிறார். எந்தவித அரசியல் பின்புலம் இல்லாத ஒருவருக்கு, வெறும் டிக்டாக் பாப்புலாரிட்டியை வைத்து பாஜக சீட் தந்துள்ளது பெரிய விஷயம். மேலும் டிக் டாக் செய்த ஒருவர் ஸ்ட்ரைட்டாக அரசியலுக்குள் என்ட்ரி ஆகி இருப்பது அதை விட பெரிய விஷயம்!
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications