நள்ளிரவு நேரத்தில் தாயுடன் படுத்து தூங்கிய 4 வயது குழந்தை.. மெல்ல வந்த மர்ம நபர்.. திக் திக் வீடியோ

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நள்ளிரவில் குழந்தையை கடத்த முயன்ற மர்ம நபர்- அதிர்ச்சி வீடியோ

    சண்டிகர்: நள்ளிரவு.. அனைவரும் அசந்து தூங்கக்கூடிய நேரம்.. அப்போதுதான் நடந்தது அந்த கொடுமை. ஆனால் நல்லவேளை, குழந்தையின் தாய் விழித்தெழுந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரிலுள்ள ரிஷி நகர் பகுதகியில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வெயில் தாங்காமல் ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள், கணவன்-மனைவி அனைவரும் வீட்டுக்கு வெளியே படுத்திருந்தனர்.

    Video: A man attempts to steal a 4-year-old child while she was sleeping

    அப்போது, மீன்பாடி வண்டியில் வந்த, ஒரு நபர், நைசாக பெற்றோர் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை எடுத்து வண்டியில் கிடத்துகிறார். நல்ல வேளையாக, குழந்தையை தூக்கியதை தாய் உணர்ந்து கொண்டார். அதிர்ச்சியடைந்த அவர் ஓடிச் சென்று, வண்டியிலிருந்து தனது குழந்தையை எடுத்துக் கொண்டு, கணவரை எழுப்புகிறார்.

    இதனால் பதற்றமடைந்த அந்த நபர், மீன்பாடி வண்டியில் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓட்டம்பிடித்தார். கணவர் எழுந்து சென்று அந்த வண்டியை துரத்துகிறார்.இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி தற்போது வெளியாகியுள்ளன.

    ஒருவழியாக காவல்துறையினர் உதவியுடன், அந்த கடத்தல்கார நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இப்போது லாக்அப்பில் செம கவனிப்பு நடக்கிறதாம். வெயிலுக்காக வீட்டு மொட்டை மாடியில் படுக்கும் மக்கள், இதுபோன்ற கடத்தல் நபர்களிடமிருந்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+