Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓவர் நம்பிக்கையில் களமிறங்கிய காங்கிரஸ்.. ஒரேயடியாக மாறிய முடிவுகள்! ஹரியானா தோல்விக்கு என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானாவில் இன்றைய தினம் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இதில் தொடக்கத்தில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தாலும் அதன் பிறகு அங்குக் காட்சிகள் மாறிவிட்டன. இப்போது பாஜகவே அங்கு ஆட்சியை அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. காங்கிரஸ் நிச்சயம் ஆட்சியை அமைக்கும் என்ற சூழல் எப்படி மாறியது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 சீட்கள் உள்ள நிலையில், அங்கு எல்லா சீட்களுக்கும் ஒரே கட்டமாகக் கடந்த வாரம் தேர்தல் நடந்தது. இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், காலை முதலே அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கிறது.

haryana assembly election results 2024 2024 haryana assembly election 2024 haryana election 2024 2024


ஓவர் நம்பிக்கை: ஹரியானாவில் நிச்சயம் வெல்வோம் என்ற மனநிலையில் தான் காங்கிரஸ் கட்சி தேர்தலை எதிர்கொண்டது.. 10 ஆண்டுகள் பாஜக ஆட்சி மீதான எதிர்ப்பு, விவசாய சட்டங்கள், அக்னிவீர் திட்டம் ஆகியவை காரணமாக எளிதாக வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் தான் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொண்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான தேர்தல் முடிவுகளும் கூட அதையே தான் காட்டியது.

ஆனால், இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கி சில மணி நேரத்தில் அங்குத் தேர்தல் களம் மொத்தமாக மாறியது. தற்போது அங்கு பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் வகையில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியால் 40க்கும் குறைவான இடங்களிலேயே வெல்லும் சூழல் இருக்கிறது. இதற்குக் காரணத்தை நாம் பார்க்கலாம்.

தடுத்துவிட்டது: ஜாட் மக்களின் வாக்குகளை மட்டுமே நம்பி காங்கிரஸ் இந்த முறை தேர்தலில் களமிறங்கியது. ராகுல் காந்தியின் சமூக நீதி தொடர்பான பேச்சுகளால் மெல்லக் காங்கிரஸ் பக்கம் சாயத் தொடங்கிய தலித்துகள் மற்றும் ஜாட் அல்லாதவர்களை இந்த நடவடிக்கை அந்நியப்படுத்தியதாகத் தெரிகிறது.

இந்த ஜாட் அல்லாத மக்கள் அப்படியே பாஜக பக்கம் வந்ததே அவர்கள் வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளது. பாஜக இந்த முறை தேர்தலில் கூட ஓபிசி மற்றும் பிராமணர்களுக்கே அதிகம் வாய்ப்பு அளித்தது. மறுபுறம் காங்கிரஸ் சார்பில் ஜாட் பிரிவினருக்கே அதிக சீட் தரப்பட்டது. இதுவே ஜாட் அல்லாதவர்கள் வாக்குகளைக் காங்கிரஸ் பக்கம் செல்வதைத் தடுத்தது.

அதிருப்தி: அதேபோல ஹரியானாவில் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் குமாரி செல்ஜா தான் முக்கிய தலைவர்களாக இருந்தனர். ஹரியானாவில் என்ன தான் ஜாட் மக்கள் தொகை 26 -28% வரை இருந்தாலும், அங்கு 17 சீட்கள் எஸ்சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், டெல்லி தலைமை ஆதரவு முழுமையாக பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு இருந்ததால் குமாரி செல்ஜா ஓரங்கட்டப்பட்டதாகத் தகவல் வெளியானது.

ஹூடா ஆதரவாளர்களுக்கு 70 சீட் சென்ற நிலையில், குமாரி செல்ஜா ஆதரவாளர்களுக்கு வெறும் 9 சீட் மட்டுமே தரப்பட்டது. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த குமாரி செல்ஜா கடைசி சில வாரங்களுக்கு முன்பு வரை பிரச்சாரம் கூட செய்யவில்லை. குறிப்பாகக் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியைக் கூட அவர் புறக்கணித்து இருந்தார். இதனால் தலித் மக்கள் வாக்குகளும் எதிர்பார்த்த அளவுக்குக் காங்கிரஸ் கட்சிக்கு வரவில்லை.

முடியவில்லை: அதாவது ஜாட் மக்களின் ஆதரவை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடிக்கலாம் என்று ஓவர் நம்பிக்கையில் காங்கிரஸ் களமிறங்கியது இந்த தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது. பாஜக மீது மக்கள் கோபம் இருந்தாலும், எதிர்ப்பு வாக்குகளைக் காங்கிரஸால் அறுவடை செய்ய முடியவில்லை. இதுவே பாஜக வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+