ஹரியானா முதல்வரான பாஜக எம்பி நயாப் சிங் சைனி.. யார் இவர் தெரியுமா? 32 ஆண்டு பின்னணி இதுதான்
சண்டிகர்: ஹரியானாவில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பாஜகவின் புதிய முதல்வராக முதல்வராக பதவியேற்றுள்ள நயாப் சிங் சைனி யார்? அவர் பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 இடங்களில் வெற்றி பெற வேண்டும். கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அதிகபட்சமாக பாஜக 41 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் கட்சி 30 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும், எச்எல்பி மற்றும் ஐஎன்எல்டி கட்சிகள் தலா ஒரு இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இதையடுத்து அங்கு பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. பாஜக, ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது.
பாஜகவின் மனோகர் லால் கட்டார் முதல்வரானார். ஜனநாயக ஜனதா கட்சியின் துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் லோக்சபா தேர்தலில் கூட்டணி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. ஹரியானாவில் 10 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில் கூட்டணியில் உள்ள ஜனநாயக ஜனதா கட்சி 5 இடங்களை கேட்டது. இதற்கு பாஜக மறுத்த நிலையில் ஜனநாயக ஜனதா கட்சி தனது ஆதரவை விலக்கிக்கொண்டது.
இதனால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து இன்று மனோகர் லால் கட்டார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் பாஜகவுக்கு 41 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் 6 சுயேச்சைகள் மற்றும் எச்எல்பி கட்சியின் ஒரு எம்எல்ஏ ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து மீண்டும் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது. இதையடுத்து பாஜகவின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பொறுப்பேற்றார். இவருக்கு ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா இன்று மாலையில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் தான் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள நயாப் சிங் சைனி யார்? அவரது பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. முதல்வராக பொறுப்பேற்றுள்ள நயாப் சிங் சைனி ஓபிசி சமுதாயத்தை சேர்ந்தவர். இவர் அங்குள்ள குருசேத்ரா நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2019ல் போட்டியிட்ட இவர் காங்கிரஸ் வேட்பாளர் நிர்மல் சிங்கை 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இவர் தற்போது பாஜக மாநில தலைவராகவும், எம்பியாகவும் உள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹரியானா பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டார். மேலும் அவர் கடந்த 30 ஆண்டுகளாக பாஜகவில் செயல்பட்டு வருகிறார். ஹரியானாவில் பாஜகவை வலுப்படுத்திய தலைவர்களில் இவரும் முக்கியமானவர். மேலும் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டாரின் தீவிர விசுவாசியாக வலம் ருகிறார்.
நயாப் சிங் சைனி முதல் முறையாக கடந்த 2002ல் அம்பாலா மாவட்ட பாஜக இளைஞர் அணி பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அதன்பிறகு 2005ல் மாவட்ட தலைவராக பொறுப்பேற்றார். அதன்பிறகு விவசாயிகள் அணியின் மாநில பொதுச்செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். 2014 சட்டசபை தேர்தலின்போது அவர் நாராயன்கார்க் சட்டசபை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். 2016ல் அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
அதன்பிறகு 2019ல் குருசேத்ரா நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்பியானார். தற்போது அவர் முதல்வராகி உள்ள நிலையில் அடுத்த 6 மாதங்களில் அவர் எம்எல்ஏவாக வேண்டும். இதனால் விரைவில் அங்கு ஏதேனும் ஒரு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு நயாப் சிங் சைனி எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications