2 லட்டு தின்ன ஆசையா கண்ணா.. பஞ்சாபில் முட்டிமோதும் பாஜக, ஆம் ஆத்மி.. அதென்ன "வெற்றி லட்டு"..?
தேர்தலை முன்னிட்டு பஞ்சாப்பில் இனிப்புகள் விற்று தீர்ந்தன
சண்டிகர்: அரசியல் கட்சிகளைவிட, ஒரு தரப்பினர் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் அது ஸ்வீட்கடைக்காரர்கள்தான்.. அதுவும் அந்த "வெற்றி லட்டு" தான் இன்றைக்கு ஹைலைட் பேச்சாக உள்ளது.
பஞ்சாப்பில் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக 117 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 2002 தேர்தலுக்கு (65.14%) பிறகு இந்த தேர்தலில்தான் மிகக்குறைந்த அளவிலான வாக்குகள் பதிவாகின.
கடந்த 2017 தேர்தலில் 77.4 சதவிகிதமாக இருந்த வாக்குப்பதிவு, இந்த முறை 71.9 சதவிகிதமாக குறைந்திருப்பது அரசியல் கட்சிகளை அதிர்ச்சியும் கவலையும் கொள்ள செய்து வருகிறது.

சீட்டுகள்
குறிப்பாக ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 40 சீட்கள் வரை மட்டுமே கிடைக்கும் என்று எக்ஸிட் போல், அதாவது தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் சொல்கின்றன... ஒருவேளை பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன செய்வது? என்ற பிளானில், முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கடந்த 2 நாட்களாகவே ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ்
காங்கிரசுக்கு சரிவு என்றால், பாஜகவும், ஆம் ஆத்மியும் படுகுஷியில் உள்ளனர்.. இதனால் தங்களுக்குதான் வெற்றி உறுதி என்ற கணிப்புடன் குஷியில் உள்ளனர்.. இந்நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்படுவதால், பஞ்சாபில் உள்ள ஸ்வீட் கடைகள் நேற்று முதலே பிஸியாகி விட்டன.. அங்குள்ள இனிப்பு கடைகளுக்கு அரசியல் கட்சிகளிடம் இருந்து பெரிய பெரிய ஆர்டர்கள் குவிய ஆரம்பித்துவிட்டது.

ஏகப்பட்ட கிராக்கி
அதிலும் லட்டுகளுக்குதான் ஏகப்பட்ட கிராக்கியாம்.. அரசியல் தலைவர்களை தவிர, வேட்பாளர்கள், ஆதரவாளர்களும் திரண்டு வந்து ஸ்வீட்களுக்கு ஆர்டர்களை தர ஆரம்பித்துவிட்டனர்.. அதிலும் வெற்றி லட்டு என்று ஒரு ஸ்பெஷலான லட்டு இருக்கிறதாம்.. இந்த ரிசல்ட்டுக்காகவே இதை பிரத்தியேகமாக செய்திருக்கிறார்கள்.. இதற்கு பாஜக மற்றும் ஆம் ஆத்மி தரப்பில் அதிக ஆர்டர்கள் வந்து கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.. காரணம், இந்த லட்டுகள் ஒவ்வொன்றும் சுமார் ஐந்து கிலோ எடை கொண்டவையாம்.
Recommended Video

பல்க் ஆர்டர்
அரசியல் கட்சிகள் இப்படி என்றால், யார் ஜெயித்தால் எங்களுக்கென்ன? கல்லா கட்டினால் சரிதான் என்ற மும்முரத்தில் ஸ்வீட் கடைக்காரர்கள் இறங்கிவிட்டனர்.. இப்படியெல்லம் பல்க் ஆர்டர் அவர்களுக்கு வந்ததே கிடையாதாம்.. யார் ஜெயித்தாலும் அவர்கள் சாப்பிட போவது லட்டுதான் என்பதால், அரசியல்வாதிகளைவிட, இந்த ஸ்வீட்கடைக்காரர்கள் செம குஷியில் இருக்கிறார்கள்..!
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications