சென்னையில் ஓடப்போகும் ஆயிரம் ஏசி பேருந்துகள்.. எந்த வழித்தடத்தில் எத்தனை பஸ்கள்.. விவரம்
சென்னை: சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம் குளுகுளு ஏசி பேருந்துகளை சென்னை மாநகரம் முழுக்க விடப்போகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் 'பசுமை சென்னை' என்ற இலக்கை நோக்கி அடியெடுத்து வைத்துள்ள சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் 1000 புதிய மின்சாரப் பேருந்துகளை வாங்க மின்-டெண்டர் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. எந்த வழித்தடத்தில் எத்தனை ஏசி பேருந்துகள் ஓடப்போகிறது என்பதையும் பார்ப்போம்.
வாங்கப்பட உள்ள 1000 நவீன ஏசி பேருந்துகளுமே 12 மீட்டர் நீளமும், தாழ்தள வசதியும் கொண்ட ஏசி மின்சாரப் பேருந்துகளாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. இதனால் முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் மிக எளிதாகப் பேருந்தில் ஏற இறங்க முடியும் என்று எம்டிசி நம்புகிறது. Gross Cost Contracting என்ற திட்டப்படி தான் பேருந்துகள் வாங்கப்பட உள்ளது. இதனை தமிழில் கூற வேண்டும் என்றால் மொத்தச் செலவு ஒப்பந்த மாதிரி என்று கூறலாம்..

அதாவது, பேருந்துகளின் கொள்முதல், விநியோகம், பராமரிப்பு மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகள் அனைத்தையும் இந்தபேருந்துகளை வாங்க ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனமே முழுமையாகக் கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
இந்த மின்னணு டெண்டர் படிவங்களை மார்ச் 06, 2026 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
முன்-ஏலக் கூட்டம் (Pre-Bid Meeting): மார்ச் 13, 2026 (பிற்பகல் 3:00 மணி)
டெண்டர் தாக்கல் தொடக்கம்: மார்ச் 25, 2026 (நண்பகல் 12:00 மணி)
கடைசி நாள்: ஏப்ரல் 07, 2026 (மாலை 4:00 மணி வரை)
டெண்டர் திறப்பு: ஏப்ரல் 07, 2026 (மாலை 4:30 மணி)
முன்பணத் தொகை (EMD): ₹5,00,00,000 (ரூபாய் ஐந்து கோடி)
விருப்பமுள்ள நிறுவனங்கள் tntenders.gov.in, mtcbus.tn.gov.in அல்லது tnidb.tn.gov.in ஆகிய இணையதளங்களில் ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து, [https://tntenders.gov.in/nicgep/app](https://tntenders.gov.in/nicgep/app) வழியாகத் தங்கள் ஏலங்களைச் சமர்ப்பிக்கலாம் என சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
சரி, சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் இந்த 1000 ஏசி பேருந்துகளை எந்தெந்த வழித்தடங்களில் ஓடவிடப்போகிறது என்பதையும் பார்ப்போம்.

ஒரகடம் - 175
தாம்பரம் - 150
தையூர் - 150
அயனாவரம் - 150
அடையார் - 130
கீரப்பாக்கம் - 125
அண்ணாநகர் மேற்கு - 120
சைதாப்பேட்டை - 50
குரோம்பேட்டை - 150
வடபழனி - 130
குத்தம்பாக்கம் - 150
எண்ணூர் - 70
திருவொற்றியூர் - 60
திருவள்ளூர் - 50
வாலாஜாபாத் - 120
வரதராஜபுரம் -110
மாமண்டூர் - 110


Click it and Unblock the Notifications
