"சனிக்கிழமைகளில்".. பள்ளி மாணவர்களுக்கு பறந்த வந்த திடீர் உத்தரவு.. இனிமேல் இப்படித்தானாம்.. அதிரடி
பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் ஸ்பெஷல் வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை தமிழக பள்ளிக்கல்வித்துறை திடீரென அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தது.. இதன் காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படுவதில் சிக்கல் எழுந்தது.
எனவே 2 வருடங்கள்கழித்து, நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அழுத்தம்
அது மட்டுமல்லாமல் மாணவர்களின் கல்வித்திறனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மாணவர்களின் கல்வித் திறன்களை மேம்படுத்த பல முயற்சிகளை எடுத்து அரசு, சமீபத்தில் தான் மாணவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது என்பதற்காக, சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என உத்தரவிட்டிருந்தது.

சனிக்கிழமைகள்
ஆனால் தற்போது, தமிழக பள்ளிகளில் 10,11, 12 வகுப்புகளுக்கு சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்த கூடாது என அமைச்சர் அறிவித்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது..

+2 மாணவர்கள்
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் உள்ளதாவது: பொதுத் தேர்வில் பங்கேற்கும் 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், தேர்வில் முதல் 10 இடங்களில் முன்னேற்றும் நோக்கத்தில் சிகரம் தொடு-2022-2023 என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் முதல்வர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு இணங்க.

சனிக்கிழமை
10, பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டும் மாணவர்களுக்கு மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தயார் செய்யும் வகையில் மேற்கண்ட வகுப்பு மாணவ -மாணவியருக்கு மட்டும் பள்ளி வேலை நாட்களில் கலை மற்றும் மாலையில் 1 மணி நேரமும், மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது. 1 -9ம் வகுப்பு மாணவர்களுக்கு இது பொருந்தாது. இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications