நாளுக்கு நாள் குறையும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் இன்றைய தினம் கொரோனா பாதிப்பு தெரியுமா?
சென்னை : தமிழகத்தில் 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 7.83 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் முற்றிலும் ஒழிந்து விட்டதால் பழையபடி மக்கள் தங்கள் இஷ்டத்திற்கு இருக்க முடியும் என்பதால் தமிழக கொரோனா அறிக்கையை ஆவலுடன் படித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் தினந்தோறும் மாநில சுகாதாரத் துறை சார்பில் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தினமும் வெளியிடப்படுகிறது. அதன்படி கொரோனாவால் இன்று ஒரே நாளில் 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பரிசோதனை
இதுவரை தமிழகத்தில் 7,83,319 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 65,058 சேம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 1,21,25,059 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. அது போல் இன்று 64,588 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ஆண்கள், பெண்கள்
இதுவரை 1,18,33,957 பேருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என சோதனை செய்யப்பட்டது. இன்று 868 ஆண்களுக்கும், 536 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை 4,73,298 ஆண்களுக்கும், 3,09,987 பெண்களுக்கும், 34 திருநங்கைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா
இதுவரை 67 அரசு பரிசோதனை மையங்கள், 154 தனியார் பரிசோதனை மையங்கள் என மொத்தம் 221 கொரோனா சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று மட்டும் 1,411 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 7,60,617 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் கொரோனாவால் 10 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 11,722 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பலியாகிவிட்டனர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்
12 வயதுக்குள்பட்டவர்களில் 14,325 ஆண் குழந்தைகளுக்கும் 13,308 பெண் குழந்தைகளுக்கும் என மொத்தம் 27633 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் 13 வயது முதல் 60 வயது வரை 3,95,569 ஆண்களுக்கும், 2,59,378 பெண்களுக்கும் என மொத்தம் 6,54,981 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் 60 வயதுக்குள் மேற்பட்டவர்களில் 63404 ஆண்களுக்கும், 37301 பெண்களுக்கும் என 1,00,705 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications