செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டணுமா? "வரி அல்ல.. வழிப்பறி.." டேட்டாவுடன் ஸ்டாலின் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டணுமா? ஜிஎஸ்டி என்பது வரி அல்ல, வழிப்பறி என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். மேலும், கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் பிரசாரம் வரும் 17 ஆம் தேதியுடன் ஒய்கிறது.

1 45 Lakh Crore Corporate Tax waived GST is not a tax it is robbery MK Stalin slams BJP

இதனால் கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. மத்தியில் ஆளும் பாஜகவை முதல்வர் முக ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார். தமிழகத்திற்கு நிதி ஒதுக்கிடுவதில் பாரபட்சம் காட்டுவதாகவும் திமுக முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்றாக உள்ளது.

இந்த நிலையில், ஜிஎஸ்டியை வரிமுறையை கடுமையாக விமர்சித்து இருக்கும் முதல்வர் முக ஸ்டாலின், வரி இல்லை வழிபறி என்று கூறியுள்ளார். முக ஸ்டாலின் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

GST: வரி அல்ல... வழிப்பறி!
"தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்" என்று முதலமைச்சராக எதிர்த்த திரு. நரேந்திர மோடி, பிரதமரானதும், "ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்'' என்று 'ஒரே நாடு ஒரே வரி' கொண்டு வந்தார்.

பேச நா இரண்டுடையாய் போற்றி!
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், Bill-இல் உள்ள GST-யைப் பார்த்து #GabbarSinghTax எனப் புலம்புகின்றனர்!

அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா?
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது.

வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள். ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள். இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+