லீவு முடிஞ்சு கிளம்புங்க.. சென்னையை நோக்கி படையெடுத்த ’சவுத்’ மக்கள்! விக்கிரவாண்டி டோல்கேட் சாதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகை நேற்று இந்தியா முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான விடுமுறை முடிந்து சென்னை திரும்பி வருகின்றனர் மக்கள். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை சுமார் 1.5 லட்சம் வாகனங்கள் கடந்து சென்றிருக்கின்றன.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை நேற்று உலகம் முழுவதும் வசிக்கும் இந்து மத மக்களால் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பல வகை விநாயகர்களை வீடுகளில் வைத்து பூஜை செய்து கொழுக்கட்டை படைத்து சிறப்பு பூஜை செய்தனர்.

Vikravandi Toll Plaza Vinayagar Chaturthi Holiday

தொடர்ந்து விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் பணிகளும் தொடங்கி இருக்கிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்தது. சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் விடுமுறை வந்தது.

விநாயகர் சதுர்த்தி

சென்னை, கோவை, திருப்பூர் போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விநாயகரை வழிபட்டனர். 3 நாட்கள் விடுமுறை முடிந்ததால் பலரும் தங்கள் வேலை செய்யும் நகரங்களுக்கு திரும்பி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து இலட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு சென்று அறையில் தற்போது அவர்கள் மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர்.

தொடர் விடுமுறை

ஆம்னி பேருந்துகள், ரயில் போன்ற பொது போக்குவரத்தை தவிர்த்து சொந்த வாகனங்களில் லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை நோக்கி ஏராளமான வாகனங்கள் பயணம் மேற்கொண்டன. பின்னர் திங்கட்கிழமை மாலை முதல் இன்றுகாலை வரை சென்னை திரும்பி வருகின்றனர் பொதுமக்கள். இதனால் பல பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாக மட்டும் கடந்த 3 நாட்களில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 220 வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி கடந்து சென்றுள்ளன. விடுமுறை முடிவடைந்த நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வாகனங்கள் திரும்பத் தொடங்கியுள்ளன. இன்று காலை வரை சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் வாகனங்கள் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து சென்னை நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனப் போக்குவரத்து

தொடர் விடுமுறை காரணமாக கடந்த மூன்று நாட்களாக விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வழக்கத்தை விட வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக வாகனங்கள் அதிக அளவில் குவிந்த நேரங்களில், சுங்கச்சாவடி ஊழியர்கள் வாகனங்களை ஒழுங்குபடுத்தி முறையாக அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சுங்கச்சாவடி பகுதியில் நீண்ட நேர போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

போக்குவரத்து நெரிசல்

பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும், விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாக அதிக அளவில் வாகனங்கள் கடந்து செல்வது வழக்கமாக உள்ளது. பொது போக்குவரத்தை தவிர்த்து தனியார் வாகனங்களில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது அதிகரித்து வருவதே போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என்கின்றனர் அதிகாரிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+