தமிழ்நாட்டில் வேகமாக குறையும் கொரோனா.. 1,652 பேருக்கு தொற்று உறுதி.. சென்னையிலும் குறைந்தது!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் கொரோனா 200-க்குள்ளயே நீடிக்கிறது.

குறையும் கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. அதன்பின்னர் கொரோனா சற்று வேகம் எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகிழ்ச்சி அளிக்கும் விதமாக கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நேற்றை விட சற்று குறைவாகும்.

உயிரிழப்பும் குறைவு
இதனால் மொத்த பாதிப்பு 25,99,255 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். திருப்பூரில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 3 பேர் இறந்துள்ளனர். புதுக்கோட்டையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் 2 பேரும், சென்னையில் ஒருவரும் உயிரிழந்தனர். இதுவரை கொரோனாவுக்கு 34,428 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,859 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 25,45,178 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் அதிகமாக இருக்கிறது.

சென்னையில் குறைவு
19,391 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,58,593 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,98,64,060 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 183 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா 200-க்கு கீழே குறைந்து ஆறுதல் அளிக்கிறது, கோவை தினசரி பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

கோவையில் ஆதிக்கம்
கோவையில் 205 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 99 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 31 பேருக்கும், மதுரையில் 14 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 25 பேருக்கும், திருவள்ளூரில் 58 பேருக்கும், திருச்சியில் 52 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 76 பேருக்கும், விருதுநகரில் 6 பேருக்கும், ஈரோட்டில் 152 பேருக்கும், சேலத்தில் 79 பேருக்கும், நாமக்கல்லில் 50 பேருக்கும், தஞ்சாவூரில் 95 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களில் சதம்
சென்னை, கோவை மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருப்பூர், சேலம் பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கொரோனா குறைந்து வருவதையொட்டி தமிழ்நாட்டில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் திறப்பு, தியேர்ட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications