சென்னைக்குள் நீங்க எந்த ஏரியாவுக்கு போகணும்? கிளாம்பாக்கத்திலிருந்து 5 நிமிடத்திற்கு 1 பேருந்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கத்திலிருந்து கோயம்பேடுக்கு 5 நிமிடத்திற்கு 1 பேருந்தும், தாம்பரத்துக்கு 2 நிமிடத்துக்கு ஒரு பேருந்தும் இயக்கப்படுகின்றன. இதனால் சென்னைக்குள் நீங்க எந்த ஏரியாவுக்கு செல்ல வேண்டும் என்றாலும் சுலபமாக செல்லலாம்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் பேருந்துகள் இயக்கம் பற்றி அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது;

1 bus runs every 5 minutes from Kilambakkam to Koyambedu and 1 bus runs every 2 minutes to Tambaram

*பெங்களூர், கிழக்கு கடற்கரை சாலைகளுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயங்கும்.

*அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை முழுமையாக இன்றிலிருந்து கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயங்கும்.

*சாதாரண நாட்களில் 300 புறப்பாடுகளும், வார இறுதி நாட்களில் 360 புறப்பாடுகள் கொண்ட அரசு விரைவு போக்குவரத்து கழகத்தினுடைய பேருந்துகள் அத்தனையும் கிளாம்பாக்கத்திலிருந்து இயங்கும்.

*சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் டிசம்பர் 31-ஆம் தேதி காலையிலிருந்து சென்னையின் எல்லா பகுதிகளுக்கும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும். ஏற்கனவே உள்ள வழித்தடத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிற பேருந்துகளை தாண்டி, கூடுதலாகவும் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.

*மாநகர போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு கிளாம்பாக்கத்திலிருந்து 270 நடைகள் இயக்கப்படும். ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்லும்.

*அதேபோல தாம்பரம் செல்கின்ற பேருந்துகள் 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து கிளாம்பாக்கத்திலிருந்து தாம்பரத்திற்கு புறப்படும். இங்கிருந்து (கிளாம்பாக்கம்) கிண்டிக்கு செல்லும் மாநகர போக்குவரத்து பேருந்துகள் மூன்று நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்று இயக்கப்படும்.

*ஏற்கனவே இந்த வழித்தடத்தில் 2386 நடை பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது கூடுதலாக 1691 நடை பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. எனவே, மொத்தம் 4077 நடைகள் கிளாம்பாக்கத்தின் இந்த வழித்தடத்திலே இயக்கப்படும்.

*அதேபோல, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அல்லாத மற்ற ஆறு போக்குவரத்து கழகங்கள் - விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய ஆறு அரசு போக்குவரத்து கழகங்களுடைய பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் வந்து அந்தந்த வழித்தடத்தில் இயங்கும். பொங்கல் வரை இந்த நிலை நீடிக்கும்.

*பொங்கலுக்கு பிறகு அந்த அத்தனை பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும். 1140 புறப்பாடுகள் பொங்கல் வரை கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும்.

*அதேபோல ஆம்னி பேருந்துகள் இன்றைக்கு கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தங்களுடைய செயல்பாட்டினை தொடங்கிவிட்டார்கள். ஏற்கனவே அவர்களுக்கு டிக்கெட் புக்கிங் ஆகியுள்ளதன் காரணத்தால், பொங்கல் வரை சென்னை நகரத்திலிருந்து இயக்கப்படும். பொங்கலுக்கு பிறகு முழுமையாக கிளாம்பாக்கத்திலிருந்து அந்த ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்.

*எனவே, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை 31ஆம் தேதி முதல் முழுமையான செயல்பாடு இங்கிருந்து தொடங்கும். மாநகர போக்குவரத்து கழகம் 31ஆம் தேதி காலையிலிருந்து இங்கிருந்து சென்னை மாநகரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படும்.

*அரசு போக்குவரத்து கழகத்தின் மற்ற ஆறு போக்குவரத்து கழகங்கள் பொங்கல் வரை கிளாம்பாக்கம் வழியாக செல்பவை, பொங்கலுக்கு பிறகு முழுமையாக கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும். அதேபோல ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து முழுமையாக இயக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+