வாழ நினைத்தால் வாழலாம்.. வழியா இல்லை பூமியில்!.. கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் நடத்தும் கஃபே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோட்டூர்புரம் அருகே "#1 கஃபே" எனும் உணவகம் மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்படுவது வேலையின்மையால் தவித்து வரும் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது.

பிறவியிலேயோ அல்லது பாதியில் ஏற்படும் விபத்து, உடல்நிலை பாதிப்பாலோ ஏற்படும் உடல்நல குறைபாடு ஒருவரது வாழ்க்கையே புரட்டி போட்டு விடுகிறது என சொல்லலாம். வாழ்வில் முன்னேற பல முயற்சிகளை முன்னெடுத்தும் இந்த உடல்நல குறைப்பாட்டை காரணம் காட்டி சில இடங்களில் வாய்ப்புகள் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றன.

நம் உடல் உறுப்புகளில் குறைபாடு இருக்கிறதே என நினைத்து மூலையில் உட்கார்ந்திருப்பதை காட்டிலும் தற்போது பலர் அந்த தடைகளை தகர்த்து விட்டு தங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர்ந்து வந்து யாருடைய தயவும் இன்றி வாழ என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறார்கள்.

சென்னை கோட்டூர்புரம்

சென்னை கோட்டூர்புரம்

அந்த வகையில் சென்னை கோட்டூர்புரத்தில் பேருந்து நிலையத்திலிருந்து 5 நிமிட தூரத்தில் வித்யாசாகர் எனும் சிறப்பு கல்வி மையம் அமைந்துள்ளது. இங்கு "#1 Cafe" எனும் புதிய ஸ்னாக்ஸ் கடை உள்ளது. இதை மாற்றுத்திறனாளிகள் நடத்தி வருகிறார்கள். சுற்றி மரங்கள் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள இந்த கடையில் மரக்கிளைகளுக்கிடையே வரும் சூரிய ஒளியை ரசித்தபடியே பில்டர் காபியை குடித்தால் ஆஹா அலாதியாக இருக்கும்.

 வரவேற்பரை

வரவேற்பரை

இந்த கடைக்கு சென்றால் வரவேற்பரையில் ரிச்சர்ட் இமானுவேல் என்பவர் வரவேற்கிறார். அவர் நம்மிடம் மெனு கார்டை கொடுத்து ஒரு பேனாவையும் கொடுக்கிறார். நமக்கு என்ன உணவு வேண்டுமோ அதை அந்த மெனு கார்டில் டிக் செய்து ரிச்சர்டிடம் கொடுத்துவிட்டால் போதும். அவர் அவருடைய 4 பேர் கொண்ட குழுவினரிடம் நாம் ஆர்டர் செய்த மெனுவை தயார் செய்யுமாறு கூறுவார்.

ஆர்டர்

ஆர்டர்

சில நிமிடங்களில் நாம் ஆர்டர் செய்த சுவையான திண்பண்டங்கள் நமது சுவை மொட்டுகளுக்கு விருந்தாக அமையும். உடல்நல குறைபாடுகளுடன் பிறந்த ஒவ்வொரு நபரும் சொந்தமாக முடிவுகளை எடுக்க உரிமை கொண்டவர்கள் என்ற ஆழமான நம்பிக்கையுடன் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக வித்யா சாகர் எனும் மையம் 36 ஆண்டுகளாக முக்கிய பங்காற்றி வருகிறது.

மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 4 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்தாலும் அது பெரும்பாலும் செயல்படுத்தப்பட்டதில்லை. மேலும் அவர்களின் பணி திறன்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அங்கீகரிக்கவே இல்லை என்கிறார் வித்யாசாகர் இயக்குநர் ராதா ரமேஷ். இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

பொருட்கள்

பொருட்கள்

கையால் செய்யப்படும் பேப்பர் பொருட்கள், திரட் பெயிண்டிங், கலை மற்றும் கைவினை பொருட்கள், நெசவு உள்ளிட்டவற்றுக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இந்த கஃபே எனும் கடையில் சூடான பீட்சாக்கள், சாண்ட் விச்கள், சமோசாக்கள், பிரெஞ்ச் பிரைஸ் உள்ளிட்டவை உள்ளது. இங்கு பிரெய்லி மற்றும் படங்களுடன் கூடிய மெனு கார்டுகளும் காணப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+