ஐயயோ.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திடம் திருடிய பணத்தை வைத்து.. வேலைக்கார பெண் என்ன செய்துள்ளார் பாருங்க!
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லாக்கரில் நகைகளை திருடி, அந்த பணத்தில் பணிப்பெண் ஒருவர் ரூ 1 கோடி மதிப்பிலான சொத்து வாங்கியது அம்பலம் .
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டின் லாக்கரில் நகைகளை திருடிய பணத்தில் பணிப்பெண் ஈஸ்வரி ரூ 1 கோடியில் சொகுசு பங்களா வாங்கியதற்கான ஆவணம் சிக்கியது. இதனால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தமிழில் 3 , வை ராஜா வை உள்ளிட்ட படங்களின் மூலம் இயக்குநரானார் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தனுஷும் ஐஸ்வர்யாவும் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா தனது தந்தையின் போயஸ் தோட்ட இல்லத்தில் வசித்து வருகிறார். தற்போது அவர் விஷ்ணு விஷாலை வைத்து லால் சலாம் எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

வைர நகைகள்
இந்த நிலையில் தன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2019ஆம் ஆண்டு எனது தங்கை சவுந்தர்யாவின் திருமணத்திற்கு பின்பு 60 சவரன் நகை, வைர நகைகளை லாக்கரில் பூட்டி வைத்திருந்தேன்.

ஆழ்வார்பேட்டை
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையில் வசித்து வந்த வீட்டில் நகைகள் இருந்தனர். பின்னர் முன்னாள் கணவர் தனுஷுடன் வசித்து வந்த சிஐடி நகரில் உள்ள வீட்டில் குடியேறிய போது அங்கும் லாக்கர் கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது போயஸ் கார்டனில் குடியேறி வசித்து வருகிறேன். லாக்கர் மாறி மாறி 3 வீடுகளில் வைக்கப்பட்டிருந்தது.

போயஸ் தோட்டம்
கடந்த மாதம் போயஸ் தோட்டம் வீட்டின் லாக்கரை திறந்து பார்த்த போது அதில் இருந்த தங்கம், வைரம், ரத்தினம் பதித்த நகைகள் காணாமல் போயுள்ளது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு வீட்டு பணியாளர்கள் மீது சந்தேகம் உள்ளது. நான் லாக்கரின் சாவியை அலமாரியில் வைப்பேன் என்பது பணிப்பெண்களான ஈஸ்வரி, லட்சுமி, கார் ஓட்டுநர் வெங்கட் ஆகியோருக்கு தெரியும். நான் இல்லாத நேரத்தில் அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்துள்ளனர்.

10ஆம் தேதி
கடந்த மாதம் 10 ஆம் தேதி லாக்கரை நான் திறந்த போது அதில் சில நகைகள் மட்டுமே இருந்தன. விலை மதிப்புமிக்க பல நகைகளை காணவில்லை. இந்த நகைகள் அனைத்தும் திருமணத்திற்கு முன்பும் பின்பும் என 18 ஆண்டுகளாக வாங்கப்பட்டவையாகும். ஒரு ஜோடி வைரம் மற்றும் பழங்கால தங்க நகைகள், நவரத்தின நகைகள், பழங்கால வைரம், ஆரம், நெக்லஸ், வளையல் என 60 பவுன் நகைகள் காணாமல் போயுள்ளன.

2 பணிப்பெண்கள்
இது தொடர்பாக எனது வீட்டில் பணியாற்றும் 2 பணிப்பெண்கள் மற்றும் கார் ஓட்டுநர் மீது சந்தேகம் உள்ளது. இவற்றை மீட்டுத் தர வேண்டும் என போலீஸாரிடம் ஐஸ்வர்யா கோரிக்கை வைத்தார். மேலும் அவர் தங்கை சவுந்தர்யா திருமணத்தில் அணிந்திருந்த நகைகளின் புகைப்படங்களையும் அடையாளத்திற்காக போலீஸாரிடம் காட்டினார்.

பணிப்பெண்ணிடம் விசாரணை
முதல் கட்டமாக பணிப்பெண்களிடமும், கார் ஓட்டுநரிடமும் நடந்த விசாரணையில் பணிப்பெண் ஈஸ்வரிதான் இந்த நகைகளை திருடினார் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நகைகள் கடந்த 4 ஆண்டுகளாக சிறிது சிறிதாக திருடப்பட்டது என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

1 கோடி சொத்து பத்திரம் மீட்பு
இந்த நகைகள் மாயம் குறித்து ஐஸ்வர்யா கடந்த மாதமே புகார் அளித்துவிட்டாராம். போலீஸ் விசாரணையில் அவர் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதனால் துப்புத் துலக்குவதில் காலதாமதம் ஏற்பட்டது என போலீஸார் தெரிவித்தனர். மேலும் பணிப்பெண் ஈஸ்வரியின் கணவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஈஸ்வரியின் வீட்டிலிருந்து ரூ 1 கோடி மதிப்பிலான சொத்து பத்திரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். திருடிய பணத்தில் சோழிங்கநல்லூரில் ரூ 1 கோடியில் சொகுசு பங்களா வாங்கியது விசாரணையில் தெரிய வருகிறது.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications