திமுக கூட்டணியில் 1 எம்.பி.சீட்? காய் நகர்த்தும் மனிதநேய மக்கள் கட்சி! ஸ்டாலின் கையில் முடிவு!
சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 1 எம்.பி.சீட் வாங்குவதற்கு காய் நகர்த்தி வருகிறது மனிதநேய மக்கள் கட்சி.
தமிழ்நாட்டில் உள்ள ஏனைய இஸ்லாமிய அமைப்புகளுக்கு மத்தியில் மனிதநேய மக்கள் கட்சி ஓரளவு வலிமையான கட்டமைப்போடும், வாக்கு வங்கியோடும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு தொகுதியையாவது வாங்கிவிட வேண்டும் என்பதில் ஜவாஹிருல்லா கவனமாக இருக்கிறார். அதை நோக்கி அவர் காய் நகர்த்த ஆரம்பித்துள்ளார்.
தற்போது எந்த தொகுதியில் போட்டியிட்டால் சாதகமாக இருக்கும் என்பது பற்றி மனிதநேய மக்கள் கட்சி தரப்பில் ஆலோசனை நடந்து வருகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே திமுகவிடம் மமக தரப்பில் 1 சீட் கேட்கப்பட்டது திரும்பிப் பார்க்கத்தக்கது.
இதனிடையே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு இஸ்லாமியக் கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கும் இந்த முறை 2 தொகுதிகளை எதிர்பார்த்து வருகிறது. ஆனால் முஸ்லீம் லீக்கிற்கு வழக்கம் போல் 1 தொகுதி தான் திமுக கொடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications