சீறி வருது சிவப்பு தக்காளி! அடுத்த 1 வாரம் வெளுத்து வாங்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 09.09.2023 மற்றும் 10.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

1 week it will be a heavy rain for Tamil Nadu: Indian weather report warning

11.09.2023 முதல் 15.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 9. தேவாலா (நீலகிரி) 5, ஹாரிசன் மலையாள லிமிடெட் (நிலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி) தலா 4, கூடலூர் பஜார் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), இரணியல் (கன்னியாகுமரி), வொர்த் எஸ்டேட் செருமுள்ளி (நீலகிரி) தலா 3 மதுக்கூர் (தஞ்சாவூர்), நடுவட்டம் (நீலகிரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), பாலமோர் (கன்னியாகுமரி), நதுமுக்கு (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி). சோலையார் (கோயம்புத்தூர்} தலா குருந்தன்கோடு (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), கறம்பக்குடி (புதுக்கோட்டை), கொளச்சல் (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி), ஏற்காடு (சேலம்).

வால்பாறை PAP (கோயம்புத்தூர்), மயிலாடி (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), பார்வூட் (நிலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), நெய்வாசல் தென்பதி (தஞ்சாவூர்). நாகர்கோவில் (கன்னியாகுமரி) மன்னார்குடி (திருவாரூர்), சித்தார் (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), அடவிநயினார்கோயில் அணை (தென்காசி)), மேல் பவானி (நீலகிரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), சூரலக்கோடு (கன்னியாகுமரி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), கோடியக்கரை (நாகப்பட்டினம்), அணைகெடங்கு (கன்னியாகுமரி), புதுச்சேரி, காக்காச்சி (திருநெல்வேலி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 1.

1 week it will be a heavy rain for Tamil Nadu: Indian weather report warning

தமிழக கடலோரப்பகுதிகள்: 09.09.2023 முதல் 12.09.2023 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும்

இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வங்கக்கடல் பகுதிகள்: 09.09.2023: தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை
ஓட்டிய மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 10.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55
கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

11.09.2023: தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென்மேற்கு
வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

12.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

13.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்: 09.09.2023: வடக்கு கேரளா-கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+