சென்னை அமைந்தகரை பிரபல மருத்துவமனையில் 3 லட்சம் பில்லுக்கு 10 ஆயிரம்.. பெண் ஊழியர் இருந்த கோலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் கருத்தரித்தல் மருத்துவமனையில் ரூ.3 லட்சம் செலுத்த வேண்டிய மருத்துவக் கட்டணத்திற்கு பதிலாக ரூ.10 ஆயிரம் மட்டுமே வங்கதேச பெண் செலுத்தியிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய சுவேதா கோஷ் தான் காரணம் என்று கூறி அவரை மருத்துவமனை நிர்வாகம் கண்டித்ததாம். இதனால் அந்த ஊழியர் மருத்துவமனையின் 4-வது மாடிக்கு ஓடி சென்று எடுத்த முடிவு பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது.

சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் தனியார் கருத்தரித்தல் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வெளிமாநிலத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் குழந்தை பெற்றுக்கொள்ள வருகிறார்கள். அந்த வகையில் குழந்தை இல்லாதவர்களுக்கு செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெற வெளிநாடுகளில் இருந்து வருவோரும் அதிகமாகவே உள்ளனர்.

10 000 paid against 3 lakh hospital bill in Chennai s Aminjikarai employee makes wrong decision

இந்த மருத்துவமனையில் வெளிநாடுகளில் இருந்து சிகிச்சைக்காக வரும் பெண்களுக்கு சிகிச்சை முறைகள், மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட விவரங்களை அவர்களது மொழியில் விளக்கும் பணியில் 29 வயதாகும் சுவேதா கோஷ் என்பவர் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை மருத்துவமனையின் 4-வது மாடியில் இருந்து சுவேதா கோஷ் திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த அமைந்தகரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், சுவேதா கோஷ் கடந்த சில ஆண்டுகளாக அந்த மருத்ததுவமனையில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. அண்மையில் வங்காளதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று குழந்தை பெற்றதாகவும், அவருக்கு மருத்துவச் செலவு உள்ளிட்ட விவரங்களை சுவேதா கோஷ் முறையாக மொழிபெயர்த்து தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ரூ.3 லட்சம் செலுத்த வேண்டிய மருத்துவக் கட்டணத்திற்கு பதிலாக ரூ.10 ஆயிரம் மட்டுமே செலுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் சுவேதா கோஷிடம் நேற்று காலை முதல் விசாரணை நடத்தி வந்ததாகவும், மாலை நேரத்தில் 4-வது மாடியில் வைத்து மீண்டும் விசாரணை நடத்தியபோது அவர் திடீரென கீழே குதித்ததாகவும் சொல்லப்படுகிறது. மருத்துவமனை நிர்வாகத்தினர் கண்டித்ததால் மனமுடைந்து சுவேதா கோஷ் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என அமைந்தகரை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அமைந்தகரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாழ்க்கையில் எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல. மனக்கவலைகள் இருந்தால் தயக்கமின்றி மேலே உள்ள எண்களைத் தொடர்பு கொண்டு பேசுங்கள்

Tele-MANAS (மத்திய அரசு மனநல உதவி எண்): 14416 அல்லது 1800-891-4416

சினேகா : 044-24640050

தமிழ்நாடு அரசு: 104

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+