தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு எப்போது? தேதி வெளியிட்டார் அமைச்சர்
சென்னை: தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணிக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் திட்டமிட்டப்படி பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே கூறியிருந்தது. அதன்படி 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை இன்று வெளியிட்டார்.

2 ஆண்டுகள்
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பருவ தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தலைமைச் செயலகத்தில் 10,11,12, ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிட்டார் அன்பில் மகேஷ். அவர் கூறுகையில் 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி செய்முறை தேர்வு தொடங்கி மே 2 ஆம் தேதி முடிவடைகிறது.

பிளஸ் 2 மாணவர்கள்
பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 5 ஆம் தேதி முதல் மே 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அது போல் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு மே 9ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரையும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்வு முடிவுகள் தோராயமமாக பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூன் 23 ஆம் தேதியும், பிளஸ் 1 ஆம் தேதி ஜூலை 7ஆம் தேதியும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 17ஆம் தேதியும் வெளியாக வாய்ப்பிருக்கிறது.

திருப்புதல் தேர்வு
திருப்புதல் தேர்வில் கேள்வித்தாள் லீக்கானது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளோம். அது திருப்புதல் தேர்வு தானே என நாங்கள் சாதாரணமாக விடவில்லை. பொதுத் தேர்வுக்கு இரு விதமான கேள்வித்தாள்களை உருவாக்கவுள்ளோம் என்றார். 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் தேதி வரை மே 5 முதல் மே 13 ஆம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெறுகிறது. ஜூன் 20 ஆம் தேதி முதல் வழக்கமான வகுப்புகள் நடைபெறும்.

10 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை
- மே 6- மொழிப்பாடம்
- மே 14- விருப்ப பாடம்
- மே 18- ஆங்கிலம்
- மே 21- வொகேஷனல் சப்ஜெக்ட்
- மே 24- கணிதம்
- மே 26- அறிவியல்
- மே 30- சமூக அறிவியல்

11 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை
- மே 10- மொழிப்பாடம்
- மே 12- ஆங்கிலம்
- மே 16- உயிரியல், தாவரவியல், வரலாறு, பிசினஸ் கணிதம் புவியியல்
- மே 19- வேதியியல், கணக்குவியல், புவியியல்
- மே 25- கணிதம், விலங்கியல், காமர்ஸ், மைக்ரோ பயோலஜி, நர்சிங், உணவு சேவை மேலாண்மை, நியூட்ரீஷன் மற்றும் டயட்
- மே 27- கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், கணினி அறிவியல், பயோ கெமிஸ்டிரி, ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளியியல்,
- மே 31- இயற்பியல், எக்கனாமிக்ஸ், கணினி தொழில்நுட்பம்

12-ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை
- மே 5- மொழிப்பாடம்
- மே 9- ஆங்கிலம்
- மே 11 - அரசியல் அறிவியல், புள்ளியியல், பயோ கெமிஸ்டிரி, கணினி அப்ளிகேஷன், கணினி அறிவியல், கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்
- மே 13- வேதியியல், புவியியல், வணிகவியல்
- மே 17- கணிதம், விலங்கியல், காமெர்ஸ், மைக்ரோ பயோலஜி, நியூட்ரீஷியன் மற்றும் டயாட்டிக்ஸ், வேளாண் அறிவியல்,
- மே 20- இயற்பியல், எக்கானாமிக்ஸ், கணினி தொழில்நுட்பம்
- மே 23- பயோலஜி, தாவரவியல், பிசினஸ் கணிதம், வரலாறு மற்றும் புள்ளியியல், டெக்ஸ்டைல் டெக்னாலஜி
- மே 28- வொக்கேஷனல் பாடங்கள் 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு 30 நாட்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்புகளுக்கு 23 நாட்கள் விடுமுறை விடப்படடுள்ளது. 12 ஆம் வகுப்புகளுக்கு 12 நாட்கள் மட்டும்தான் விடுமுறை விடப்பட்டுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications