"மாட்டிக்கிச்சே".. 3 பெரிய திமிங்கலம்.. அமித்ஷா போனதுமே ஆக்ஷனில் பாஜக.. காரணம் அந்த ஒரே "வார்த்தை"
அமித்ஷா தெரிவித்த 2 பாயிண்ட்கள் குறித்து அலசல்கள் நடந்து வருகிறது
சென்னை: தேர்தல் கூட்டணிகள் கணக்குகள் ஒருபக்கம் இருந்தாலும், தமிழக பாஜக கையில் எடுக்கும் வியூகங்கள், பிற கட்சிகளுக்கு மலைப்பை தந்து வருகிறது.
தேசிய அளவில் பாஜக முதன்மை கட்சியாக... ஏகப்பட்ட மாநிலங்களில் தேர்தல் வெற்றிகளைக் குவித்தாலும் தென் மாநிலங்களில் அதுவும் தமிழகத்தில் இன்னும் 3 சதவீத வாக்கு வங்கியை தாண்ட முடியாமல் இருப்பதுதான் அதன் வருந்தத்தக்க நிலைமை!
இதை அமித்ஷா, மோடி முதல் யாராலுமே ஜீரணிக்கவும் முடியவில்லை என்பதாலேயே தமிழகத்தின் மீது தற்சமயம் கவனம் கூடிஉள்ளது..

இம்மியளவு
தமிழகத்தில் பாஜகவால் வளர முடியாததற்கு திராவிட அரசியல், அதிமுக, திமுக ஆகிய இரு மாநில கட்சிகளின் செல்வாக்கு தான் முதன்மை காரணம் என்பதை மெதுவாகத்தான் பாஜக மேலிடம் புரிந்து கொண்டதுடன், திராவிட கட்சிகள் இல்லாமல் தமிழகத்தில் தம்மால் ஒரு இம்மியளவுகூட முன்னேற முடியாது என்ற யதார்த்தத்தையும் உணர்ந்து கொண்டுவிட்டது.. தற்சமயம், அதிமுகவின் தோளில் சவாரி செய்ய வேண்டிய நிலைமைக்கு பாஜக ஆளாகி உள்ளது என்றாலும், இதற்கு காரணம் பிளவுபட்ட அதிமுகவாக இருந்து வருவது, வருந்தத்தக்கது.. கவலைக்குரியதும்கூட.

நம்பர் 1
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி சென்னை வந்திருந்தபோது, தமிழக பாஜக தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.. அப்போது அவர்களிடம் "பாஜவுக்கு திமுகதான் நம்பர் ஒன் எதிரி.. அதனால் தமிழக அரசை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டும்.. இதற்கு பாஜக தலைமை முழு ஆதரவு தரும்.. என்ன செய்வீங்களோ தெரியாது, வரப்போகும் எம்பி தேர்தலில் தமிழகத்தில் குறைந்தது 5 தொகுதிகளிலாவது பாஜக வெற்றி பெற வேண்டும் என்று சொல்லிவிட்டு போனதாககூட செய்திகள் பரபரத்தன.. அதேபோல, சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது, அமித்ஷாவும் சென்னையில் நிர்வாகிகளிடம் பேசியுள்ளார்.

கலைஞர்
அப்போது சில முக்கிய விஷயங்களை பேசியதாக சொல்லப்படுகிறது, "முதல்ல கட்சியை பலப்படுத்துங்கள், கூட்டணி நீங்கள் யாரும் பற்றி கவலைப்பட வேண்டாம், அதையெல்லாம் நாங்கள் பார்த்து கொள்கிறோம்.. பூத் கமிட்டியில் இருந்து உங்கள் உழைப்பை துவங்குங்கள்.. திமுகவுக்கு நிகர் பாஜகதான் என்பதை பறை சாற்றுகிற அளவுக்கு உழையுங்கள், கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் பிந்தைய அரசியலில், ஒரு பெரிய வெற்றிடம் தமிழகத்தில் உருவாகி உள்ளது.. பாஜகவினர் கடுமையாக உழைத்தால் அடுத்த 5 ஆண்டில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம்... பாஜக அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தினாராம்.

ஒத்த வார்த்தை
அதாவது, மோடியும்சரி, அமித்ஷாவும் சரி, திமுக ஒன்றையே தொடர்ந்து குறி வைத்து வருவது தெரியவருகிறது.. திமுகவுக்கு எதிராக என்று சொல்லாமல், திமுகவுக்கு நிகராக என்ற வார்த்தையை அமித்ஷா பயன்படுத்தியதையும் கவனிக்க வேண்டி உள்ளது.. இதைதான் சமீபகாலமாகவே அண்ணாமலையின் பேச்சிலும் காண முடிகிறது... திமுகவுக்கு மாற்று நாங்கள்தான், தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி நாங்கள்தான் என்பதை அவர் பலமாதமாகவே சொல்லி வந்தாலும், "திமுகவுக்கு சித்தாந்த மாற்று நாங்கள்தான்' என்று சொன்னதையும் இங்கே நினைவுபடுத்த வேண்டி உள்ளது..

மாய பிம்பம்
அதாவது, ஒருபக்கம் திராவிட சித்தாந்தம் என்றால், மறுபக்கம் இந்திய தேசியம் என்பதே இதன் அர்த்தம் என கொள்ளலாம். வெற்றி பிம்பத்தை முதலில் ஏற்படுத்த வேண்டும்.. அந்த வெற்றி பிம்பம் என்பது இரட்டை இலை சின்னமும் கிடைத்து, ஒருங்கிணைந்த அதிமுகவாக இருந்தால் மட்டும்தான் கிடைக்கும்.. அப்போதுதான் பாஜகவுக்கும் லாபம்.. அதிகபட்சமாக 10 தொகுதிகளுக்கு மேல் கிடைக்க வாய்ப்பில்லை என்றாலும், ஒருங்கிணைந்த அதிமுக தேவை என்பதுதான் தற்சமய தேவையாக இருக்கிறது.. ஒருவேளை எடப்பாடி தங்கள் வழிக்கு வராத பட்சத்தில், முழு பலத்துடன் கூட்டணி அமைத்து பாஜக தலைமையிலேயே தேர்தலை சந்திக்கவும் தயாராகி வருவதாக சொல்கிறார்கள்.

PLAN 1
அந்தவகையில், திமுகவை நோக்கி மட்டுமே அம்புகள் பாய தொடங்கி உள்ளன.. திமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் அம்பலத்தி, திமுகவை டேமேஜ் செய்ய வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகவும் இருந்து வருகிறது.. அந்தவகையில் ஏற்கனவே 2 முக்கிய அமைச்சர்களின் ஊழல் விவகாரங்களை வைத்து செக் வைத்து வரும்நிலையில், வேறு 3 அமைச்சர்களையும் சிக்கலை உண்டுபண்ண, பாஜக யோசித்து வருகிறதாம்..

PLAN 1
அதற்கான வழக்கின் தகவல்களையும், புள்ளிவிவரங்களையும் திரட்டும்படியான உத்தரவும் வந்துள்ளதாம்.. குறைந்தபட்சம் 5 அமைச்சர்களின் ஊழல் விவகாரங்களை அம்பலப்படுத்த முயலும்பட்சத்தில், அது அக்கட்சியின் மீதான இமேஜை உடைத்து, பாஜகவுக்கு பிளஸ் ஆக இருக்கும் என்றும் கணக்கு போடப்பட்டு வருவதாக தெரிகிறது.. எப்படி பார்த்தாலும், திமுக மீது டெல்லியின் கவனம் குவிந்துள்ள நிலையில், "திமுகவுக்கு நிகரான" என்று அமித்ஷா சொன்ன அந்த வார்த்தையையும் திமுக கவனிக்க வேண்டி உள்ளது..!!!
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications