மொத்தமாக மாறுது சென்னை மெரினா! ஜொலிக்கும் கார்டன்கள், நீர் வீழ்ச்சிகள்.. சிஎம்டிஏவின் மாஸ் பிளான்
சென்னை: சென்னை சாந்தோமில் இருந்து நேப்பியர் பாலம் வரையிலான 4 கிலோ மீட்டர் மெரினா நடைபாதையில் ஒரு பெரிய மேக் ஓவர் அமைக்க சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது. இதில் ஒளியேற்றப்பட்ட பாரம்பரிய கட்டமைப்புகள், கார்டன்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட இருக்கின்றன.
சென்னை என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மெரினா கடற்கரைதான். ஆசியாவிலேயே இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினா, சென்னைவாசிகளின் மிகச்சிறந்த சுற்றுலா தலம் என்று சொன்னால் மிகையல்ல. காற்று புகக் கூட இடம் இல்லாத அளவுக்கு நெருக்கமாக அமைந்திருக்கும் கான்கீரிட் கட்டிடங்களுக்குள் வசிக்கும் சென்னை மக்கள் இளைப்பாற அவ்வப்போது சென்னை மெரினா கடற்கரைக்கு படையெடுப்பதை காண முடியும்.

கடலின் அழகை குடும்பத்துடன் சென்று ரசித்து விட்டு அங்குள்ள கடைகளில் விருப்பப்பட்டதை வாங்கி சாப்பிட்டுவிட்டு வருவதை காண முடியும்.. அதேபோல, வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்கள், தங்கள் பயண லிஸ்டில் கண்டிப்பாக மெரினா கடற்கரையை வைத்து இருப்பார்கள். இதனால், வார நாட்களிலும் மாலை வேளைகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
சென்னை மக்கள் மனதில் நெருக்கமான இடத்தை பிடித்துள்ள சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது மெரினா கடற்கரையில் புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, ரூ. 10 கோடி செலவில் மெரினாவில் புதிய பாரம்பரிய மற்றும் செயல்பாட்டு மையம் அமைக்கப்பட இருக்கிறது.
அதேபோல, சாந்தோம் தேவாலயத்தில் இருந்து நேப்பியர் பாலம் வரையிலான 4 கி.மீட்டர் மெரினா நடைபாதையில் பெரிய மேக் ஓவர் அமைக்கப்பட உள்ளது. இந்த மேக் ஓவரில் ஒளியேற்றப்பட்ட பாரம்பரிய கட்டமைப்புகள், தோட்டங்கள் மற்றும் மேம்படுத்தப்பட நடைபாதை ஆகியவை அமைக்கப்பட உள்ளன. நகர்புற சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அதேபோல, நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள தூண்களில் பல வண்ணங்களில் டிசைன்கள் அமைப்பது, பெரிய அளவிலான டிஜிட்டல் போர்டுகள்.. நடந்து வரும் சுற்றுலாப் பயணிகள் சாலையை சிரமம் இன்றி கடக்கும் வகையில் சுரங்கப்பாதைகளை மேம்படுத்துவது போன்ற பணிகளும் செய்யப்பட உள்ளன.
இதுமட்டும் இன்றி கடலின் அழகை அமர்ந்து ரசிக்கும் விதமாக இருக்கை வசதிகள், போதுமான விளக்குகள், தெளிவான வழிகாட்டி பலகைகள், மின்னொளியில் ஜொலிக்கும் தோட்டங்கள், செயற்கை நீர் வீழ்ச்சிகள், கலை சிற்பங்களுடன் கூடிய தோட்டங்கள் ஆகியவற்றையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் சென்னை சாந்தோம் முதல் நேப்பியர் வரையிலான இடங்கள் புதிய இடங்கள் போல மாறிவிடும் என்று சிஎம்டிஏ அதிகாரிகள் கூறினர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications