நிமிடத்திற்கு 10 கோடி சம்பளம்! லண்டனில் வீடு; 450 கோடி சொத்து! கமல் சொகுசு வாழ்க்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன் 'கல்கி 2898’ படத்தில் கேமியோ ரேலில் நடித்ததற்காக மட்டும் 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாகவும், இதனால் இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகராக அவர் உயர்ந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் என்பது பல காலமாக சினிமா ரசிகர்களின் மனதை ஆட்டிப் படைத்து வரும் கேள்வி. அதற்கு விடை தேடுவது ஒன்றும் அவ்வளவு சுலபமான விசயம் இல்லை. இப்படி ஒரு கேள்வி பொதுவாக எழும்போது, நிச்சயம் பாலிவுட் நடிகர் ஒருவர்தான் அதிக ஊதியம் பெறுபவராக இருப்பார் என்பது பலரது கருத்தாக இருக்கும்.

Kamal Haasan Kalki 2898 AD

ஆனால், அந்தக் காலம் மலையேறிவிட்டது என்று சொல்கிறது இன்றைய திரையுலகம். தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் பான் இந்தியா படங்கள் பாலிவுட் படங்களைவிட பல கோடிகளை வசூல் செய்கின்றன. இன்று அப்படி தலைகீழாக மாறியுள்ளது திரையுலகம்.

நல்ல நடிகர், திறமையான நடிகர் என்பதால் அதிக சம்பளம் கிடைப்பதில்லை. யாருக்கு மார்கெட் வேல்யூ உள்ளதோ அவர்கள் கோடிகளில் சம்பளம் பெறுகிறார்கள். இன்று தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகிய நடிகர்கள் எல்லாம் 100 கோடி சம்பளம் வாங்குவது என்பது சாதாரண விசயம். அந்த அளவைக் கடந்து பல கோடிகளை இவர்கள் சம்பளமாகப் பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு வெளியான தனது மூன்று படங்களின் மூலம் ரூ.500 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார் நடிகர் ஷாருக்கான். ஜெயிலர் என்ற ஒரு வெற்றி படத்தின் மூலம் மட்டும் ரஜினிகாந்த் சுமார் ரூ.250 கோடி சம்பாதித்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. ரீடிஃப் செய்தியின்படி, 'கல்கி 2898’ என்ற புராண படத்தில் 10 நிமிட கேமியோ ரோலில் நடித்ததற்காக மட்டும் நடிகர் கமல்ஹாசன் ரூ.100 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரெடிஃப் ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள செய்தியில் பிரபாஸ், கமல் ஆகிய இருவரும் தலா ரூ.100 கோடி சம்பளம் பெற்றுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கமல்ஹாசன் வெறும் 10 நிமிடம்தான் நடித்துள்ளார்.

இவரது சம்பளம் பற்றிய செய்தி உண்மையாக இருந்தால், கல்கி படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசன் நிமிடத்திற்கு 10 கோடி ரூபாய் பெற்றுள்ளார் என கணக்குப் போட்டு கூறியுள்ளது டிஎன்ஏ இந்தியா. ஆனால், முன்பு ரெடிஃப் வெளியிட்ட வேறு செய்தியில் கமலின் சம்பளம் இதைவிடக் குறைவாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு, சினிமா வர்த்தகம் குறித்த கணிப்புகளை வெளியிட்டுவரும் மனோபாலா விஜயபாலன் என்பவர் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில் கமல்ஹாசன் கல்கி 2898 AD இல் நடித்ததற்காக ரூ.20 கோடி வாங்கினார் என்று சொல்லி இருந்தார். இந்தப் படத்தில் அதிக சம்பளமாக 80 கோடி ரூபாய் நடிகர் பிரபாஸ் வாங்கியுள்ளார் என்று கூறியிருந்தார். இந்தப் படம் இரண்டு பாகங்களைக் கொண்டது. ஆகவே இரண்டுக்கும் சேர்த்து கமல்ஹாசன் ரூ.100 கோடி சம்பளம் பெற்றார் என்றும் சொல்லப்படுகிறது.

கமல்ஹாசன் பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி கிட்டத்தட்ட அவருக்கு 450 கோடி ரூபாய் சொத்துகள் உள்ளது தெரியவந்துள்ளது. அவர் சினிமாவில் நடிப்பதைத் தவிர, பிக்பாஸ் நிகழ்ச்சி, கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம், விளம்பரங்களில் நடிப்பது போன்றவற்றின் மூலம் நிறைய வருமானங்களைப் பெறுகிறார் என அந்தச் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அவரிடம் ரூ. 131 கோடிக்கு அசையா சொத்துகள் உள்ளன. இதில் ரூ.17.79 கோடி மதிப்பில் 35.59 ஏக்கர் விவசாய நிலமும் வைத்துள்ளார். ரூ.19.5 கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பில் ஆடம்பரமான 2 வீடுகளை வைத்துள்ளார். இவை தவிர லண்டனில் 2.5கோடி ரூபாய்க்கு ஆடம்பர வீடு வைத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அவரிடம் லெக்ஸஸ் எல்எக்ஸ் 570 கார் ஒன்று உள்ளது. அதன் விலை ரூ.2.82கோடி.

இது தவிர ரூ.1.3 கோடி மதிப்பில் பிஎம்டபுள்யூ 730 எல்டி கார் ஒன்று வைத்துள்ளார். இவைப் போக அவரது வீட்டில் பல லட்ச விலை மதிப்புள்ள வீட்டு உபயோக உபகரணங்கள் உள்ளன. அவர் பயன்படுத்தி வரும் ஒரு வாட்ச் விலை மட்டுமே 45 லட்சம் ரூபாய் எனத் தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+