சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தீபாவளி போனஸ்.. போக்குவரத்து கழகம், ரேஷன் கடை ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை : அரசு போக்குவரத்து கழகம், மின் உற்பத்தி பணியாளர்கள் உள்பட தமிழக அரசு பொதுத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் 10% தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட வசதியாக தமிழக அரசு போனஸ் அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

10% Diwali bonus has been announced for all public sector employees in Tamil Nadu

அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின்உற்பத்தி பணியாளர்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தேயிலை தோட்டக் கழக ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10% போனசாக கிடைக்கும்.

நவம்பர் 7 முதல் 30 வரை பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா? பசுமை தீர்ப்பாயம் கேள்வி நவம்பர் 7 முதல் 30 வரை பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா? பசுமை தீர்ப்பாயம் கேள்வி

2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ரூ. 210 கோடியே 48 லட்சம் ஒதுக்கி உள்ளது தமிழக அரசு . முன்னதாக போக்குவரத்து, மின்சாரம் என மாநில பொதுத்துறை நிறுவனங்கள், வாரிய ஊழியர்களுக்கு 8.33% போனஸ்+11.67% கருணைத் தொகை என 20% தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார சரிவு மற்றும் நிதிச்சுமை கருத்தில் கொண்டு 10% சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துளளது. நிரந்தர தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத்தொகையாக ரூ.8,400 பெறுவார்கள்.

English summary
10% Diwali bonus has been announced for all public sector employees in Tamil Nadu, including State Transport Corporation and power generation employees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X