டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதற்கு விடிவுகாலம்.. அரசிடம் உறுதி அளித்த பணியாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ. 10 கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்படும் நிலையில், இந்த விவகாரத்துக்கு ஒரு விடிவுகாலம் பிறந்துள்ளது.

டாஸ்மாக் மதுபானங்களை நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்படுவார், மூன்றாம் முறையாக கூடுதல் விலைக்கு விற்பது உறுதி செய்யப்பட்டால் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும், பெரும்பாலான இடங்களிலும் கூடுதலாக ரூ.10 வசூல் செய்வது தொடர்வதாக கூறப்படுகிறது.

Tasmac

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டாஸ்மாக் பணியாளர் சங்கத் தலைவர் பழனி பாரதி, "அமைச்சரிடம் டாஸ்மாக்கில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கான காரணங்களை விளக்கினோம். சரக்கு இறக்கு கூலி, பாட்டில் உடைப்பு இழப்பு, காலி பாட்டில் கையாளும் செலவு மற்றும் இரவு நேரக் காவல் செலவு போன்ற நிர்வாக செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இந்த கோரிக்கைகள் குறித்து அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மாநிலம் முழுவதும் உள்ள 4,200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் 24 ஆயிரம் ஒப்பந்தப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் வரவேற்போம். பல ஆண்டுகளாகப் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசுத்துறையில் மாற்றுப் பணி வழங்க வேண்டும். மேலும், தற்போதைய ஆட்சியில் ஊதிய உயர்வு மற்றும் ஈஎஸ்ஐ வழங்கிய அரசுக்கு நன்றி.

டாஸ்மாக் கடைகளில் இனி எம்.ஆர்.பி விலையை விட ஒரு ரூபாய் கூட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என்ற அரசின் அறிவுறுத்தலை முழுமையாக ஏற்றுகொள்கிறோம். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சங்க நிர்வாகிகளும் MRP விலைக்கே மது விற்பனை செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளோம். கூடுதல் கட்டணத்தில் மது விற்கமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.

சரக்கு இறக்கு கூலி, பாட்டில் உடைந்தால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டவே கூடுதல் விலை வசூல் செய்யப்படுவதாக பணியாளர்கள் கூறிவந்த நிலையில், அதனை அரசே ஏற்பதாக உறுதி செய்தால், கூடுதல் பணம் வசூல் செய்ய மாட்டோம் என டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்மூலம் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கும் விவகாரத்துக்கு விடிவுகாலம் பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+