ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை.. இன்று மேல்முறையீடு செய்ய போறீங்களா? இந்த 10 விஷயம் முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இன்று முதல் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த மேல்முறையீடு செய்யும் நபர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள் உள்ளன.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி உள்ளது. வெள்ளிக்கிழமையில் இருந்து 1.06 கோடி பேருக்கு தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது .

10 important things you should notice in the Kalaingar 1000 RS Housewives money Scheme appeal

இந்த திட்டத்திற்கு 1.70 கோடி விண்ணப்பித்த நிலையில் கிட்டதட்ட 70 லட்சம் பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உள்ளது. இந்த நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய முடியும். இதற்கு முன் சில விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து அதில் உங்களுக்கு பணம் வரவில்லை என்றால் நீங்கள் பின்வருமாறு மேல்முறையீடு செய்யலாம்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

உங்களிடம் கார் உள்ளிட்ட வாகனங்கள் இல்லை என்பதை உறுதி செய்யவும்.

உங்கள் கணவர், நீங்கள் அரசு வேலையில் இல்லை என்பதை உறுதி செய்யவும்.

உங்களிடம் ஆதார் கார்டு இணைக்கப்பட்ட வங்கி கணக்கு உள்ளதா என்பதை பார்க்கவும்.

திட்டத்தில் கொடுக்கப்பட்ட வரையறைகள் அனைத்தையும் நீங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் என்றால் பணம் கிடைக்காது.

மாநில, மத்திய அரசு ஊழியர்கள்/ பொதுத்துறை நிறுவனங்கள்/ வங்கிகளின் ஊழியர்கள்/ வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் தவிர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள் என்றால் மேல்முறையீடு செய்ய முடியாது.

சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள் என்றால் மேல்முறையீடு செய்ய முடியாது.

ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual Turnover) செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் என்றால் மேல்முறையீடு செய்ய முடியாது.

ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் என்றால் மேல்முறையீடு செய்ய முடியாது.

வழிகாட்டு நெறிமுறைகள்: குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000/- உரிமைத் தொகையாக வழங்கிட தமிழக அரசால் 'கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்' செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற 24.07.2023 முதல் 04.08.2023 வரை முதல் கட்டமாகவும், 05.08.2023 முதல் 14.08.2023 வரை இரண்டாவது கட்டமாகவும், மேற்சொன்ன இரண்டு கட்டங்களிலும், விடுபட்டவர்களுக்கு 18.08.2023 முதல் 20.08.2023 வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கோடி மகளிர் பயனாளிகளாகத்

மேல்முறையீடு
கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18.09.2023 முதல் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.

10 important things you should notice in the Kalaingar 1000 RS Housewives money Scheme appeal

வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும் நேர்வுகளில், சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் வழி கள ஆய்வு அறிக்கையினைப் பெற்று விசாரணை செய்வார். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும்.

புகார்கள்
வருவாய் கோட்டாட்சியர் பயனாளிகளின் தகுதி மற்றும் தகுதியின்மைகள் தொடர்பாக தனி நபர்களின் மூலம் வரப்பெறும் புகார்கள் குறித்த விசாரணை அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் வழியாகப் பெறப்படும் புகார்கள் மேல் முறையீட்டு மனுக்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறைகளைப் பின்பற்றி விசாரிக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+