2026 தேர்தல் கற்றுக்கொடுத்தது என்ன..? தவெக விஜய் வெற்றியை தாண்டி இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாட்டில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிந்து முதல் முறையாக தேர்தலை சந்திக்கும் விஜய் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார். சுமார் 108 இடங்களில் வெற்றி வாகை சூடிய தவெக கட்சியினர் தற்போது சென்னை பனையூரில் விஜய் அவர்களை சந்திக்க உள்ளனர்.

இந்த நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பிரபல அரசியல் விமர்சகரான சுமந்த் ராமன் "தமிழக தேர்தல் முடிவுகளில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள்" என்ற தலைப்பில் 10 முக்கியமான விஷயங்களை எக்ஸ் பக்க பதிவில் பட்டியிலிட்டு உள்ளார். இந்த பதிவு 24 மணிநேரத்தில் கிட்டத்தட்ட 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

TVK vijay politics Sumanth Raman lessons Tamil Nadu election Tamil Nadu 2026 election results analysis TVK Vijay victory lessons 10 lessons from TN election Sumanth Raman political analyst caste less important Tamil Nadu money doesn t buy votes Tamil Nadu no need for political experience Tamil Nadu politics change 2026 booth agents not necessary manifesto not required massive ad spend failure Tamil Nadu election new trends Vijay TVK success secret future of Tamil Nadu politics 2026 2026 10

சுமந்த் ராமன் இந்த பதிவில் முதலில் சுட்டிக்காட்டியுள்ளது என்னவென்றால், இந்த தேர்தலை பார்க்கும் போது ஒருவர் வாரக்கணக்கில் தினமும் கடுமையாக பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, வாக்காளர்களை திரட்டுவதற்கு பூத் ஏஜெண்டுகள் எப்போதும் முக்கியமானவர்களாக இருப்பார்கள், அதுவும் அவசியம் இல்லை, நீண்ட நாட்கள் தொடர்ச்சியான களப்பணி மற்றும் பூத் அளவிலான ஒருங்கிணைப்பு இல்லாமலேயே பெரிய வெற்றியைப் பெற முடியும் என்பதை தவெக-வின் வெற்றி காட்டியுள்ளது.

இதை விட முக்கியமாக ஆட்சியை பிடிக்க அரசியலில் முன் அனுபவம் தேவையில்லை, மாநிலத்தையும், மக்களையும் மேம்படுத்துவதற்கான நீண்ட கால திட்டத்துடன் வலுவான தேர்தல் அறிக்கையும் தேவையில்லை, அனுபவம் வாய்ந்த ஆலோசகர்கள் கூட தேவையில்லை.. இது எதுவுமே இல்லாமலும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை இந்த தேர்தல் மூலம் சுமந்த் கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல் தலைவர்கள் ஊடகங்களை சந்திப்பது அல்லது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது போன்றவையும் ஆட்சி அமைக்கவும், தேர்தலில் வெற்றி பெறவும் அவசியமில்லை.. முன்பு இதெல்லாம் அவசியம் என்று தான் நினைத்ததாகவும் சுமந்த் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

பணம் கொடுத்தால் வாக்குகளை பெற்றுவிடலாம் என்ற பிம்பத்தை இந்த தேர்தல் மூலம் உடைக்கப்பட்டு உள்ளது, பெரிய அளவில் செலவு செய்து விளம்பரம் செய்தாலும் எதிர்பார்த்த பலனைத் தருவதில்லை, அதேபோல், உள்ளூர் தொகுதியில் செல்வாக்கு மிக்க வேட்பாளர்கள் தேவையில்லை..

தமிழக அரசியலில் நீண்ட காலமாக முக்கிய பங்கு வகித்து வந்த சாதி அடைப்படையிலான முக்கியம் தவெக வெற்றியின் மூலம் குறைந்து வருகிறது என்றும் இந்த 10 பாடங்களை இந்த தேர்தல் மூலம் கற்றுக்கொண்டதாக சுமந்த் ராமன் குறிப்பிட்டுள்ளார்.

இதோடு, இந்த மாற்றங்கள் அடுத்த தேர்தல்களில் தொடருமா அல்லது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடுமா என்ற கேள்வியையும் தனது பதிவின் இறுதியில் முன்வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+