பிளான் 10.. தமிழ்நாட்டுடன் பார்ட்னர் ஆன 10 வல்லரசு நாடு.. அடித்து தூக்கிய ஸ்டாலின்.. பெரும் நம்பிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பார்ட்னர் நாடாக வருவதற்கு பல்வேறு உலக நாடுகள் முன்வந்துள்ளன. இதனால் இந்த மாநாடு மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் வெளிநாடு பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் பயணம் மேற்கொண்டார். ஜனவரி 2024-இல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க பயணம் மேற்கொண்டார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் கொண்டு வரவும் இந்த பயணம் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

மாநாடு விரைவில்; தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் கொண்டு வரவும் இந்த பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் ஸ்டாலின் முக்கிய சந்திப்புகளை நடத்தினார். அங்கே அரசியல் தலைவர்கள், பல்வேறு நிறுவன சிஇஓக்கள், அங்கே வசிக்கும் தமிழர்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைகளை மேற்கொண்டார்.
களமிறங்கும் நாடுகள்: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பார்ட்னர் நாடாக வருவதற்கு பல்வேறு உலக நாடுகள் முன்வந்துள்ளன. இதனால் இந்த மாநாடு மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அமெரிக்கா
பிரான்ஸ்
ஆஸ்திரேலியா
UK
ஜப்பான்
தென் கொரியா
ஜெர்மனி
டென்மார்க்
சிங்கப்பூர்
தைவான் ஆகிய நாடுகள் இந்த மாநாட்டிற்கு பார்ட்னர் நாடுகளாக வந்துள்ளன.
தமிழ்நாடு நிதி நுட்பக் கொள்கை 2021. தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை 2021. தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை 2022, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022, தமிழ்நாடு விண்வெளி & பாதுகாப்புத் தொழில் கொள்கை 2022. தமிழ்நாடு எத்தனால் கலவைக் கொள்கை 2023 மற்றும் தொழில் நுட்ப ஜவுளிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்புதிட்டம் போன்ற பல்வேறு துறை சார்ந்த கொள்கைகளை குறித்து வெளிநாட்டு பயணத்தின் போது முதல்வர் ஸ்டாலின் சர்வதேச நிறுவனங்களுடன் ஆலோசனை செய்தார். இது தமிழ்நாட்டிற்கு ஆதரவாக மாறி உள்ளது.
தமிழ்நாட்டில் நடத்தப்பட உள்ள இந்த முதலீட்டாளர்கள் ,மாநாடு மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. 3 லட்சம் கோடிக்கு முதலீடுகளை கொண்டு வர தமிழ்நாடு அரசு ஆலோசனைகளை செய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பார்ட்னர் நாடாக வருவதற்கு சிங்கப்பூர் கோரிக்கை விடுத்துள்ளது.
முதல் நாடாக சிங்கப்பூர் தனது வருகையை உறுதி செய்ததுடன், இந்த மாநாட்டில் பார்ட்னர் நாடாக இருக்கவும் விரும்புவதாக தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் முதலீடுகளை அதிகரிக்கவும் சிங்கப்பூர் முடிவு செய்துள்ளது. இதற்காக பிளான் 5 எக்ஸ் என்பதை சிங்கப்பூர் களமிறக்க உள்ளது.. அதாவது சராசரியாக செய்யும் முதலீடுகளை விட 5 மடங்கு அதிகம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சிங்கப்பூர் அமைச்சர்கள் பலரை தமிழ்நாடு அமைச்சர்கள் சந்தித்த நிலையில்தான் இந்த நல்ல செய்தி வந்துள்ளது.
குவியும் முதலீடுகள்: தமிழ்நாடு 2 ஆண்டுகளில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது; உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படும். கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர மின் வாகனங்களில் 46% வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை.
கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன.
முக்கியமாக இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு சென்னை முழுக்க கார், பைக் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications