"பிராமணர்கள்".. முதல்ல ஜாதி வாரியா லிஸ்ட் எடுங்க.. இந்துத்துவா கனவு பலித்தது.. சீறும் திமுக அமுதரசன்
10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு குறித்து திமுகவின் அமுதரசன் சொல்கிறார்
சென்னை: சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும், அப்போதுதான் எவ்வளவு உயர்சாதி மக்கள் உள்ளனர்? எவ்வளவு பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர்? அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பில் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளார்கள்? என்பது தெரியவரும் என்று திமுகவின் அமுதரசன் ஆணித்தரமாக சொல்கிறார்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி யு.யு. லலித் அடங்கிய 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.
நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி. பர்திவாலா ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசன அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்றும் நீதிபதிகள் யுயு லலித், ரவீந்திர பட் ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்றும் தீர்ப்பளித்தனர்.

3: 2
அதனால், 3:2 என்ற விகிதத்தில் வெளியாகியுள்ள இந்த தீர்ப்பின் மூலம், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுத்த 103ஆவது அரசியல் சாசன திருத்தச் சட்டம் செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது.. இந்நிலையில், திமுகவின் செய்தி தொடர்பு துணை செயலாளர் அமுதரசன், நம் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் தன்னுடைய கருத்துக்களையும், ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளார்.. அமுதரசன் நம்மிடம் சொன்னதாவது:

பிரயோஜனம்
தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.. அந்த தீர்ப்பை விமர்சிக்கவும் முடியாது.. சட்டரீதியாக அடுத்தக்கட்ட நடவடிக்கையைதான் எடுக்க வேண்டி உள்ளது.. சாதி ஏற்கனவே தலைவிரித்தாடும் நிலையில், பிற்படுத்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கானதுதான் இடஒதுக்கீடு.. ஆனால், இன்று அந்த கூற்றையே நீதிமன்றம் நிரூபிக்க தவறியதாக தெரிகிறது... ஏனென்றால், பொருளாதார அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளது.. இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு ஏற்புடையதாகுமா? உயர்சாதி ஏழைகள் என்று இவர்கள் முன்னிறுத்துபவர்கள் யார் என்றால், பிராமணல்லாத உயர்குடி மக்களைதான்..

முதலியார்கள்
முதலியார்கள், ரெட்டியார்கள், போன்றோரெல்லாம் இதன்மூலம் பலனடைய போவதாக சொல்கிறார்கள்.. ஆனால், 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்த இந்த குறுகிய காலத்தில், எத்தனை பிராமணல்லாத உயர்குடி மக்கள் பலன் அடைந்துள்ளார்கள்? நீட் தேர்வை எடுத்துக் கொண்டால், 13 சதவீத மார்க் எடுக்கக்வடிய பிராமணர்கள் உள்ளே நுழைந்துள்ளார்கள்.. மீண்டும் உயர்சாதி இந்துக்களாக சொல்லக்கூடிய பிராமணரல்லாதோருக்கு இதனால் எந்த பிரயோஜனமும் இருக்க போவதில்லை.. எனவே, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இதனால் ஆபத்து மட்டுமே வரும்.

லிஸ்ட் எடு
இடஒதுக்கீடு யாருக்கும் தரக்கூடாது என்று சொல்ல முடியாது.. யாருக்காக வேண்டுமானாலும் கொண்டு வரலாம்.. ஆனால், 69 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவரும்போது, எதன் அடிப்படையில் இதை கொண்டு வருகிறீர்கள் என்று கேட்டார்கள்.. சாதி வாரி கணக்கெடுப்பு உள்ளதா? என்றும் கேட்டார்கள்.. 1931-ல் வைத்துள்ள கணக்கை வைத்துதான், இதை கொண்டு வருகிறோம் என்று நீதிமன்றம் அப்போது பதில் சொன்னது.. அதே கேள்வியைதான் இப்போது கேட்கிறோம், உயர்சாதி இந்துக்களாக உள்ளவர்களில் ஏழைகளாக உள்ளவர்கள் எத்தனை சதவீதம் பேர் உள்ளனர்? கல்வியறிவு இல்லாமல் இருக்கக்கூடியவர்கள் எத்தனை சதவீதம்? என்ன புள்ளிவிவரம் இருக்கிறது? எந்த அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது? என்று கேட்கிறோம்.

பிராமணர்கள்
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளில் 5 பேரில் 2 பேர், இந்த தீர்ப்பானது, சமூக நீதிக்கு எதிரானது என்றே சொல்லி உள்ளார்கள்.. இவ்வளவு காலமாக, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு போராட்டக்களமானது, இப்போது வேறு தளத்துக்கு, வேறு வடிவத்திற்கு சென்றுள்ளது.. தேசிய அளவில், நீட் தேர்வையே எடுத்துக் கொண்டால், 100-க்கு 51 சதவீதம், பிராமண சமூகத்தை சேர்ந்தோரோ, இடம்பிடித்துள்ளார்கள்.. இன்றைக்கு 10 சதவீதம் மேலும் கூடுதலாகி விட்டது.. எதற்காக "பிராமணர்களை" குறிப்பிட்டு சொல்கிறோம் என்றால், அவர்கள்தான் எல்லா இடங்களிலும் ஆக்கிரமித்து கொண்டுள்ளார்கள்.. இந்த 10 சதவீதம் தரப்போவதிலும் அவர்கள்தான் பலனடைய போகிறார்கள்..

பரமஏழை
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு யாருக்குமே தரக்கூடாது என்பதுதான், அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் வாதம்.. இன்றைக்கு ஏழையாக இருப்பவர்கள் நாளை பணக்காரராக மாறலாம் அல்லது இன்றைக்கு பணக்காரராக இருப்பவர்கள் நாளை ஏழையாக மாறலாம்.. எனவே, பணம் என்பதோ பணம் வருவாய் என்பதோ, இடஒதுக்கீட்டில் ஒரு அளவுகோல் கிடையாது.. வசதிவாய்ப்புகள் இருந்தும், சாதிரீதியாக ஒதுக்கப்பட்டவர்களுக்கு என்ன வழி? பொருளாதாரத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை கொண்டுவந்தால், எஸ்சி, எஸ்சிக்களுக்கான இடஒதுக்கீடு என்னாகும்?

கனவும் நனவும்
ஆக, இடஒதுக்கீடு என்ற முறையையே காலி செய்வதற்காகத்தான், இவர்கள் பொருளாதார இடஒதுக்கீடு என்ற விஷயத்தை முன்வைத்து உள்ளே வந்திருக்கிறார்கள்.. ஒட்டுமொத்தமாக இடஒதுக்கீட்டை ஒழித்து கட்ட வேண்டும் என்பதுதான், இந்துத்துவா கூட்டம், ஆர்எஸ்எஸ் கூட்டத்தின் நீண்ட நாள் கனவு.. அது இன்று சட்டப்பூர்வமாக நிறைவேறியுள்ளது.. இந்தியா முழுவதும், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்கள், மத்திய அரசின் வேலைவாய்ப்புகள், அவர்களுடைய அலுவலகங்கள் என அனைத்தையுமே புள்ளிவிவரங்கள் எடுக்க வேண்டும்.. எத்தனை சதவீதம் இதுவரை இடஒதுக்கீடு தரப்பட்டுள்ளது என்பதையும் ஆராய வேண்டும்..

SC., ST.,
கடந்த 12 ஆண்டுகளில், எஸ்சி., எஸ்சியை சார்ந்தோரில், ஒரே ஒரு பிஎச்டி கூட இன்னைக்கு படிக்க முடியவில்லையே.. ஒரே ஒரு எஸ்சி. எஸ்டி, சமூகத்தை சார்ந்த உதவி பேராசிரியர் போஸ்ட்டிகில் இருந்து, பேராசிரியராக வாய்ப்பு வாங்க முடியவில்லையே.. அவ்வளவு ஏன், படிக்கவே அனுமதிக்கயில்லையே.. படித்தால்தானே வேலைக்கு போக முடியும்? மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் எந்த இடத்திலும் முறையான இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை என்று உச்சநீதிமன்றமே சொல்லி உள்ளது.. அதனால்தான், சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்து வேண்டும் என்கிறோம்.

ஸ்டிரைக்
அப்போதுதான், எவ்வளவு உயர்சாதி மக்கள் உள்ளனர்? எவ்வளவு பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர்? அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பில் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளார்கள்? எந்த அளவுக்கு அவர்கள் சமுதாயம் முன்னேறியுள்ளது? என்பதெல்லாம் தெரியவரும்.. இடஒதுக்கீட்டு முறையை மற்றவர்களுக்கும் அமல்படுத்திவிட்டாலும் என்று சொன்னாலும்கூட, மிக மிக சொற்பமான அளவில்தான் கடைகோடிக்கு போய் சேர்ந்துள்ளது.. அதுக்காகவே, சாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கிறோம்.. அந்தவகையில், திமுக தன் சட்டப்போராட்டத்தை கையில் எடுக்கும், மக்களை திரட்டி போராட்டம் நடத்தும்.. சட்டவல்லுநர்கள் தரும் ஆலோசனைபடி அடுத்தக்கட்ட நகர்வுக்கு நகரும்" என்றார்.
-
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
துண்டு துண்டாக விஜய் உடைக்கும் திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக 18% வாக்குகளா? ஷாக்கிங் கணிப்புகள் -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள்











Click it and Unblock the Notifications