இ பான் கார்டு பெறுவது எப்படி? எங்கே விண்ணப்பிப்பது? ஏன் அவசியம்? - 10 முக்கிய பாயிண்ட்ஸ்
சென்னை: ஆன்லைன் வழியாக இ பான் கார்டை எப்படி டவுன்லோடு செய்வது என்று இங்கே பார்க்கலாம். அரசின் பல சேவைகளுக்கு பான் கார்டு அவசியம். அதனால் அதை எப்படி டவுன்லோடு செய்வது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
வருமான வரித் துறையானது நிரந்தர கணக்கு எண்ணை PAN கார்ட் என்ற பெயரில் எல்லோருக்கும் வழங்கி வருகிறது. நம்முடைய அனைத்து வங்கி, பண பரிவர்த்தனைகளை கணக்கில் எடுக்க, கண்காணிக்க, அலச இந்த பாண் எண் அவசியம் ஆகும்.
இதை வங்கி கணக்குடன் கட்டாயமாக இணைக்க வேண்டும். அதே போல் ஆதார் அட்டையுடன் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது. இது ஒரு தனித்துவமான 10 இலக்க எண்ணெழுத்து எண்ணாகும். அனைத்து வரி செலுத்துவோருக்கும் பான் கார்டு கட்டாயம். அதே சமயம் இதை அட்டையாக மட்டுமே பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு PAN கார்டைப் பெறுவது போலவே நீங்கள் வீட்டில் இருந்த படியே தற்போது e-PAN ஐ ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்.
1. சாதாரண பான் அட்டைகள் காணாமல் போகும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் ஆன்லைன் சேவைகள் பலவற்றிற்கு பான் கார்டு அவசியம். இதற்கு பான் கார்டை போட்டோ எடுத்து அப்லோடு செய்வது சரியாக இருக்காது.
2. இதன் காரணமாகவே தற்போது இ பான் கார்டு அவசியம் ஆகிறது . இந்த இ பான் கார்டு மூலம் எளிதாக ஆன்லைன்ஸ் சேவைகளுக்கு பான் கார்டை பயன்படுத்த முடியும்.
(இன்று முதல் புது விதி அமல்: அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிய பிறப்பு சான்றிதழ்! எங்கெல்லாம் பயன்படுத்தலாம்)
3. நீங்கள் இதுவரை இ ஆதார் கார்ட் பயன்படுத்தி இருப்பீர்கள். அது போலவே இதுவும். பல சேவைகள் ஆன்லைனுக்கு மாறி உள்ள நிலையில் இ பான் கார்டும் அவசியம் ஆகிறது.
4. இந்திய குடிமக்கள் மற்றும் NRIகள் (நிறுவனங்கள், NGOக்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், அறக்கட்டளைகள் மற்றும் பல உட்பட) புதிய PAN ஐப் பெறுவதற்கு படிவம் 49A ஐ பூர்த்தி செய்ய வேண்டும். வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு படிவம் 49AA அவசியம்.
5. ஒருவர் என்எஸ்டிஎல் அல்லது யுடிஐஐடிஎஸ்எல் போர்டல் வழியாக e-PAN க்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி உடனடி மின்-பான் எண்ணுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் பதிவிறக்கம் செய்யலாம். கார்டுதாரரின் பின்வரும் விவரங்கள் இ-பான் கார்டில் குறிப்பிடப்படும்.
நிரந்தர கணக்கு எண்
பெயர்
தந்தையின் பெயர்
பாலினம்
பிறந்த தேதி
புகைப்படம்
கையெழுத்து
க்யு ஆர் குறியீடு
6. இ பான் கார்டு பெற பின்வரும் தகுதிகள் இருக்க வேண்டும்.
நீங்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
நீங்கள் தனிப்பட்ட வரி செலுத்துபவராக இருக்க வேண்டும்.
உங்களிடம் ஆதார் அட்டை இருக்க வேண்டும்.
உங்கள் ஆதார் அட்டை விவரங்கள் புதுப்பித்த நிலையில் இருக்க வேண்டும்.
உங்கள் மொபைல் எண் உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
7. இ பான் பெறுவதற்கு நீங்கள் https://www.tin-nsdl.com/ என்ற NSDL portal தளத்திற்கு செல்ல வேண்டும். அதில் 'Quick Links', என்பதை கிளிக் செய்து 'PAN-New facilities' என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில் வரும் ஆப்ஷனில் e 'Download e-PAN/e-PAN XML (PANs allotted in last 30 days)' or 'Download e-PAN/e-PAN XML (PANs allotted prior to 30 days)' என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
( மிக முக்கிய ஆவணமாக உருவெடுத்த "பிறப்பு சான்றிதழ்".. கிராமங்களில் டவுன்லோடு செய்வது எப்படி?)
8. அடுத்து வரும் பக்கத்தில், 'Acknowledgement Number' or 'PAN' option என்பதில் 'PAN' option, என்பதை தேர்வு செய்து. உங்களின் PAN number, Aadhaar number, date of birth/, captcha code ஆகியவற்றை கொடுத்து Submit' பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
9.அதில் ஓடிபி கேட்கும். இந்த ஓடிபி உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட போன் எண்ணுக்கு செல்லும். இதை கொடுத்து நீங்கள் வேலிடேட் செய்ய வேண்டும்.
10. அதன்பின் டவுன்லோட் ஆப்ஷன் காட்டும். அதை கிளிக் செய்து நீங்கள் உங்கள் புத்தம் புதிய இ பான் கார்டை டவுன் லோடு செய்து கொள்ளலாம்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications