10 வயசுதான் ஆகிறது இந்த சிறுவனுக்கு.. முகேன் ராவ் தீவிர ரசிகன்.. இசையிலும், பாட்டிலும் அசத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் சில வாரங்கள் முன்பு நிறைவடைந்த் பிக்பாஸ்-3 டைட்டில் வென்ற முகேன் ராவ் உங்களில் பலருக்கும் விருப்ப நாயகனாக இருக்க கூடும். ஆனால், 10 வயது சிறுவன் ஒருவர், முகேனின் தீவிர விசிறி, என்பதும், அவரது பாடல்களை பியோனாவில் இசைத்து அசத்துவதும் பார்க்கவே வியப்பாக உள்ளது.

மலேசியாவைச் சேர்ந்தவர் முகேன். மலேசியா மற்றும் தமிழ் ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு அதிகம். முகேன் ராவ் எழுதி பாடிய பல பாடல்கள் ஹிட் லிஸ்டில் சேர்ந்துள்ளன. மலேசிய இளைஞர்கள் மத்தியில் பிரபலமான அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியால் இப்போது தமிழக மக்களுக்கும் பிடித்த நாயகனாகியுள்ளார்.

10 year old Chennai boy J.Y.Shaaru Skandan wants to meet, Bigg Boss Mugen Rao

ஆனால் எத்தனையோ சினிமா ஹீரோக்களுக்கு மத்தியில் முகேனின் பாடல்களுக்காக சென்னையை சேர்ந்த 10 வயது சிறுவன் தீவிர ரசிகராக மாறியுள்ளது, சற்றே வித்தியாசமானது. அந்த சிறுவன் பெயர், ஜே.ஒய்.ஷாரு ஸ்கந்தன் (J.Y.Shaaru Skandan). நமது வாசகரின் மகன்.

இசை மீது கொண்ட ஆர்வத்தால், கடந்த 2 வருடமாக பியானோ கற்று வருகிறார். இணையதளத்தில் இருந்து நோட்ஸ் கற்றுக் கொண்டு, இசையமைத்து அசத்தி வருகிறார் ஷாரு ஸ்கந்தன். மெலோடி இசை மீது கொள்ளை பிரியம் ஷாரு ஸ்கந்தனுக்கு. அதிலும் முகேன் ராவ் பாடல் என்றால், அப்படியே உருகிவிடுவாராம்.

10 year old Chennai boy J.Y.Shaaru Skandan wants to meet, Bigg Boss Mugen Rao

முகேன் ராவ் பாடி வெளியிட்ட "சத்தியமா நான் சொல்லுறேன் டி" என்ற பாடல் இணையதளத்தில் வைரலாகியது. இளைஞர்கள் முணுமுணுக்கும் பாடலாக மாறிவிட்டது. இந்தபாடல் என்றால் ஷாரு ஸ்கந்தனுக்கும் ரொம்ப பிடிக்கும். அந்த பாடலை, கீபோர்டில் இசையமைத்து அச்சு பிசகாமல் அசத்திவிட்டார் பத்தே வயதான ஸ்கந்தன்.

கீபோர்ட் மூலம், இசையில் அந்த பாடலை இசைத்துக் காட்டியதோடு, தனது இனிமையான குரலில், ராகம் மாறாமல் பாடியும், கலக்குகிறார், ஷாரு ஸ்கந்தன். அந்த வீடியோக்களை, யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார். நமது வாசகர்கள், இந்த யூடியூப் லிங்க்கை கிளிக் செய்து சிறுவனின் திறமையை கண்டு ரசிக்கலாம்.

முகேன் ராவை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்பதில் தீராத தாகம் கொண்டுள்ளார் ஷாரு ஸ்கந்தன். படிப்பு, இசை, பாடல் என அனைத்து விஷயங்களிலும் தனித்துவம் கொண்ட இந்த தனது இளம் ரசிகனை, முகேன் ராவ் சந்தித்து செல்ஃபி எடுக்கப்போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+