Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைக்கு அருகே வருது.. பிரம்மாண்ட சாட்டிலைட் டவுன்.. எங்கே என்று தெரிஞ்சா.. ஆடிப்போய்டுவீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாமல்லபுரம் அடுத்த பத்தாண்டுகளில் ஒரு முழுமையான சுற்றுலா மையமாக மாறும். கடற்கரைச் சுற்றுக்கள், கலாச்சாரப் பாதைகள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் சாகச மண்டலங்கள் போன்ற பல அம்சங்களைக் கொண்டிருக்கும், அதே நேரத்தில் அதன் பழமையான கல் நினைவுச்சின்னங்கள் அப்படியே பாதுகாக்கப்படும். இந்த நகரத்தை ஒரு சுற்றுலா மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு மாநில சுற்றுலாத் துறை 10 ஆண்டு கால சுற்றுலா தலங்களுக்கான மாஸ்டர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) இந்தத் திட்டத்தை தயாரிக்க ஒரு ஆலோசனை நிறுவனத்தை நியமிப்பதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 8-12 மாதங்களுக்குள் பெரிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

mamallapuram chengalpattu chennai

மாமல்லபுரத்தை ஒரு சர்வதேச இடமாக உருவாக்க நாங்கள் கருதுகிறோம். இது மாமல்லபுரம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளின் சுற்றுலா மற்றும் கலாச்சார திறனை மேம்படுத்தும் ஒரு விரிவான வளர்ச்சியாக இருக்கும். CMDA-ன் திட்டம் விதிமுறைகளின்படி இருக்கும் என்று தமிழக அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது.

சாட்டிலைட் நகரம்

அதேபோல் சென்னைக்கு அருகே ஆறாவது புதிய நகரமாக (செயற்கைக்கோள் நகரம்) மகாபலிபுரம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் கீழ் மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி சார்பாக இங்கே உயர்த்தப்பட உள்ள கிராமங்களின் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, வளவந்தாங்கல், சந்தானம்பட்டு, நெம்மேலி, கிருஷ்ணங்கரணை, திருப்போரூர், சலுவன்குப்பம், பட்டிப்புலம், தண்டலம், வெங்கலேரி, ஆலத்தூர், கருங்குழிப்பள்ளம், பையனூர், சிறுதாவூர், அதிகமநல்லூர், காரணை, பஞ்சானந்தூர், அமஞ்சான்பட்டி, அமஞ்சான்பட்டி, அமமுகநல்லூர், அமமுகநல்லூர், தஞ்சைநல்லுார், ஆகிய வருவாய் கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. , கொக்கிலிமேடு, மகாபலிபுரம், பூஞ்சேரி, காடம்பாடி, மற்றும் பெருமளேரி-வடகடம்பாடி-நல்லான்பிள்ளைப்பெற்றல் ஆகிய 25 கிராமங்கள் உயர்த்தப்பட உள்ளன.

இந்த கிராமங்கள் நகரங்களாக மாற்றப்பட்டு சர்வதேச தரத்திற்கு மாற்றப்பட உள்ளது. இங்கே இருக்கும் பழமையான புராதன சின்னங்களை பாதிக்காமல், சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக சர்வதேச தரத்திற்கு மகாபலிபுரத்தை உயர்த்தும் திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். 25 கிராமங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நிலையில் மகாபலிபுரம் சென்னையின் புதிய துணை நகரமாக, துணை அடையாளமாக மாறும், இங்கே முதலீடுகள் குவியும், போக்குவரத்து அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

பெரும்பொருட்செலவில் மாமல்லபுரத்தில் துணை கோள் நகரம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். சென்னைக்கு மிக அருகில் மாமல்லபுரம் உள்ளது. நிறைய கடல் வளம் உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாக உள்ளது. இங்கே துணைக்கோள் நகரம் வரும் பட்சத்தில் இந்த மாமல்லபுரம் மின்சார ரயிலுடன் இணைக்கப்படும். மெட்ரோவும் கூட இங்கே எதிர்காலத்தில் வர உள்ளது.

மெட்ரோ பணிகள் இந்த 20 ஆண்டுகளில் இங்கும் முடிக்கப்படும். தற்போது இங்கே நியூ டவுன் அமைப்பதற்கான கன்சல்டன்சி பணிகளுக்கு டெண்டர் விடுக்கப்பட உள்ளது . விரைவில் இதற்கான திட்ட அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னைக்கு இணையாக சர்வதேச தரத்தில் மாமல்லபுரம் இதன் மூலம் உயர்த்தப்படும். அண்ணா சாலை போல பெரிய சாலைகள், உயர் கட்டிடங்கள், சுற்றுலா அமைப்புகள் இங்கே உருவாக்கப்படும்.

அதேபோல் புதிய நிறுவனங்கள், முதலீடுகள் இங்கே ஈர்க்கப்படும். மேலும் சாலைக்கு கீழே மின்சாரம், ஸ்மார்ட் சிட்டி அமைப்புகள், நவீன கட்டிடங்கள், புதிய பாலங்கள் அமைக்கப்படும். முக்கியமாக இங்கே இருக்கும் கிழக்கு கடற்கரை சாலை வளத்தை பயன்படுத்திக்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது

கடந்த காலங்களில் டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் நியூ டவுன்கள், சாட்டிலைட் சிட்டிகள், உருவாக்கப்பட்டன. அந்த நகரங்கள் தற்போது பெரிய வெற்றியும் அடைந்து உள்ளன. டெல்லியிலும் குர்கிராம், நொய்டா போன்ற இடங்களில் இதேபோல் துணை கோள் நகரங்கள் உருவாக்கப்பட்டன. அதேபோல் மாமல்லபுரத்தில் நியூ டவுன் கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+