10 ஆண்டு சேமிப்பு திட்டம்.. மாதம் ₹1,000 போதும்.. தபால் நிலையத்தில் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேமிப்பு திட்டம் என்று சொன்னாலே மாதம் ஆயிரக்கணக்கில் பணம் ஒதுக்க வேண்டும் என்று நிறைய பேர் நினைத்து விடுவார்கள்.. ஆனால், மாதம் 1000 ரூபாய் என்று சின்ன தொகையை தொடர்ந்து சேமித்தாலே, அடுத்த சில வருஷத்திலேயே கணிசமான பணத்தை சேர்க்க முடியும். அதிலும் அஞ்சலகத்தில் இருக்கும் தொடர் வைப்பு திட்டம், சிறுக சிறுக பணம் சேர்ப்பவர்களுக்கு பயன்படும் ஒரு வழியாக இருக்கிறது... இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!

தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள் என்றாலே, தங்களுடைய பணத்தை பாதுகாப்பாக சேமிக்க நினைக்கும் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது போஸ்ட் ஆபீஸ்தான்..

Savings Plan

தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள்

வங்கிகளில் இருப்பதைப் போலவே, அஞ்சலகங்களிலும் சிறு சேமிப்பு முதல் நீண்டகால சேமிப்பு வரை பல்வேறு திட்டங்கள் உள்ளன. நம்முடைய வருமானத்துக்கு ஏற்ப மாதம் மாதம் சிறிய தொகையைச் சேமித்து, எதிர்காலத்தில் ஒரு கணிசமான தொகையை உருவாக்கிக்கொள்ளும் வகையில் இந்த திட்டங்கள் உள்ளன.

அந்த வகையில், மாதந்தோறும் பணம் கட்டி சேமிக்கும் தபால் நிலைய தொடர் வைப்பு நிதி திட்டம் (Post Office Recurring Deposit) முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த திட்டத்தில் மாதந்தோறும் பணம் செலுத்தி சேமிக்கலாம். இந்தக் கணக்கு முதலில் 5 ஆண்டுகளுக்கானது.

தபால் நிலைய தொடர் வைப்பு நிதி திட்டம்

ஆனால், விதிமுறைகளுக்கு உட்பட்டு இதை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. அதாவது, மொத்தம் 10 ஆண்டுகள் வரை தொடர்ந்து பணம் சேமிக்க முடியும்.

இப்போது ஒரு சின்ன கணக்கு போட்டு பார்ப்போம். மாதம் 1000 ரூபாய் என்று ஒதுக்கி வைத்து தொடர்ந்து 10 ஆண்டுகள் சேமித்தால், நாம் நேரடியாக செலுத்தும் மொத்த தொகை ரூ.1.20 லட்சம். இதற்கு திட்டத்தின் விதிமுறைகளின்படி கிடைக்கும் வட்டியும் சேரும். அப்போது 10 ஆண்டுகள் முடிவில் கைக்கு வரும் தொகை, நாம் செலுத்திய ₹1.20 லட்சத்தைவிட கணிசமாக அதிகமாக இருக்கும்.

1000 ரூபாய் சேமிப்பு

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரே நாளில் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மாதம் சம்பளம் வந்ததும் 1000 ரூபாயை முதலில் சேமிப்புக்காக ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள பணத்தை குடும்பச் செலவுகளுக்கு பயன்படுத்தலாம். இப்படி தொடர்ந்து செய்வதுதான் இந்தத் திட்டத்தின் அடிப்படை.

அஞ்சலக RD-க்கு குறைந்தபட்ச மாத வைப்பு தொகை 100 ரூபாய் முதல் தொடங்குகிறது. மேலும் இந்தத் திட்டத்தில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கடன் பெறும் வசதியும் உள்ளது. அதனால், எதிர்பாராத குடும்ப செலவு வந்துவிட்டால் சேமித்த பணத்தை மொத்தமாக உடனடியாக எடுத்துவிடுவதற்கு பதிலாக, திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு கிடைக்கும் வசதிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

10 வருடத்தில் எவ்வளவு?

ஒரு மாதம் 1000 என்றால் பெரிய தொகை போல தெரியாது.. ஆனால், 10 வருடத்துக்கு கணக்குப் போட்டால் நம்முடைய சொந்த சேமிப்பே 1.20 லட்சமாகிறது.. அதற்கு மேலாக வட்டியும் சேருகிறது. இதுதான் சிறு சேமிப்பின் பலம்.

பெரிய தொகை இல்லையே, எப்படி சேமிப்பது என்று கவலைப்படுவோருக்கு, இதுபோன்ற திட்டங்கள் ஒரு தொடக்கமாக இருக்கலாம். மாதம் ஆயிரம் ரூபாயை தொடர்ந்து ஒதுக்க முடிந்தால், இன்று தொடங்கிய அந்தச் சிறிய சேமிப்பே நாளை ஒரு கணிசமான தொகையாக மாறும்... சிறு தொகையாக இருந்தாலும் தொடர்ந்து சேமிப்பதுதான் முக்கியம்....!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+