100/100.. "கை" நடுங்கிட, "கரும்பு" பிழிந்திட.. பாட்டில் போதையை வென்ற சீமான்.. செல்லப்பாண்டியன் ஹேப்பி
மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க வேட்பாளர் ஆறுமுகம் அடித்து ஒட்டியுள்ள போஸ்டர் பலரையும் கவனிக்க வைத்துள்ளது
சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பாக, முதல் வேட்பாளராக, களமிறங்கினாரே ஆறுமுகம்.. அவர் நேற்றைய தினம் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா?
இந்த முறை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே, பிரதான கட்சிகள் ஆலோசனையில் இறங்கிவிட்டது.. ஆனால், முதல்நபராக வேட்பாளரை அறிவித்தது மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம்.
அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எம்.எஸ்.ஆறுமுகம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். டாஸ்மாக் கடைகளின் வெளியே கிடக்கும் காலி பாட்டில்களைப் பொறுக்கி விற்பனை செய்து, அதன்மூலம் டெபாசிட் தொகுதியை இவர்கள் செலுத்தினார்கள்.

விதவைக்கோலம்
மதுவால் பல குடும்பங்கள் நாசமாவதை சுட்டிக்காட்டும் விதமாக, எல்லா தேர்தல்களிலும் போலவே இந்தமுறையும், வெள்ளை புடவை அணிந்து, தலைவிரி கோலத்திலும், விதவை கோலத்திலும், கையில் மஞ்சள் தாலி கயிறுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார் ஆறுமுகம்.. "டாஸ்மாக் செங்கல்" சுமந்தும், பிணக்கோலத்திலும் தொகுதி மக்களிடம் வாக்குகளையும் சேகரித்து வந்தனர்.. "பகுத்தறிவு மண்ணிலே பணமழை பொழிகிறது, பாட்டில் அலை வீசுகிறது, பரிசுகள் பல குவிகிறது, பத்திரிகையாளர் முகம் வீங்குகிறது, இதற்கெல்லாம் பாராமுகம் காட்டும் தேர்தலை கண்டித்து முகத்தில் கரியை பூசிக்கொண்டு ஓட்டுக் கேட்டு வந்தார் வேட்பாளர் ஆறுமுகம்" என்ற கோஷத்துடன் ஈரோடு தொகுதியில் இச்சங்கத்தினர் வலம் வந்தது அம்மக்களின் கவனத்தை ஈர்த்தது.

கரும்பு சாறு பிழிந்திட
காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்றத்தில் விதவைகளுக்காக குரல் கொடுக்க தயாரானால் என்னுடைய மனுவை நான் வாபஸ் பெறுவேன்" என்றார் ஆறுமுகம்.. "இலைக்கு" வேலையில்லை, "கை" நடுங்கிட, "கரும்பு" சார் பிழிந்திட வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிறார் நமது "பாட்டில் பொறுக்கி நாயகன்" ஆறுமுகம் என்று கேட்டு அச்சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன் விடுத்த அறிக்கையானது ஈரோட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.. பிரச்சாரங்கள் ஒருவழியாக முடிவடைந்த நிலையில், மறுநாளே, இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டதற்கான செலவுத்தொகையை இந்த சங்கம் கணக்கு காட்டி விட்டது.

300 கோடி நடுக்கம்
அத்துடன் அதை போஸ்டர் அடித்தும் பகிரங்கமாக ஒட்டியது.. அதில், தனக்கு ரூபாய் 27 ஆயிரத்து 500 செலவாகி உள்ளதாக செலவு கணக்கு வெளியிட்டுள்ளதுடன், தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் உளமார நன்றி தெரிவித்துள்ளார். வேட்பு மனு தாக்கல் தொடங்கி வாக்குப்பதிவு நாள் வரையிலுமாக இந்தத் தொகை செலவாகி உள்ளதாகவும், இதில் 8 பேரிடமிருந்து 9,500 ரூபாய் நிதியாக பெறப்பட்டுள்ளது. மீதத்தொகை மட்டுமே தனது சொந்த தொகை என்றும் ஆறுமுகம் அதில் தெரிவித்திருந்தார்.. இப்படி முதல் நபராக வேட்பாளரை அறிவித்தும், தேர்தல் செலவை காட்டி முதன்முதலில் போஸ்டர் அடித்தும் ஒட்டிய இந்த மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா?

டோட்டல் 100
இந்த இடைத்தேர்தலில் 48 சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 77 பேர் போட்டியிட்டார்கள்.. ஆனால், இவர்கள் யாருமே டெபாசிட்கூட பெறவில்லை.. அதேசமயம், அனைத்து வேட்பாளர்களும் குறைந்தபட்சம் "ஒரே ஒரு" வாக்கையாவது பெற்றிருந்தனர்.. அதாவது, எந்த ஒரு வேட்பாளரும் பூஜ்ஜியம் பெறவில்லை என்பது மிக முக்கியமான விஷயம்.. இதில் மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம், மொத்தம் 100 ஓட்டுக்களை பெற்றுள்ளது. 4வது ரவுண்டு வாக்கு எண்ணும்போதே, 48 ஓட்டுக்களை பெற்றிருந்தார் ஆறுமுகம்.. இறுதியாக எண்ணி முடிக்கும்போது, மொத்தம் 100 வாக்குகளை பெற்றிருக்கிறார்.

பாட்டில் போதை சீமான்
அதாவது போட்டியிட்ட 78 பேரில், 13வது இடம் இந்த சங்கத்துக்கு கிடைத்துள்ளது.. இதை பற்றி அச்சங்கத்தின் தலைவர் செல்லப்பாண்டியனிடம் நாம் தொடர்பு கொண்டு பேசியபோது, இப்போதைக்கு 100 வாக்குகள், நாளைக்கு 100-க்கு 100 பெறுவோம் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.. இதில் என்ன ஒரு ஹைலைட் என்றால், 100 ஓட்டுக்களை வாங்கின இவர்கள், 10 ஆயிரம் ஓட்டுக்களை பெற்ற சீமானுக்கு வாழ்த்து சொல்லி உள்ளார்கள்.. இதை பற்றி செல்லப்பாண்டியன் நம்மிடம் சொல்லும்போது, "பணபோதை + பாட்டில் போதைகளை வென்றவர்" சீமான் என்று புகழ்ந்து சொல்கிறார்.. தனக்காக 100 ஓட்டுக்களை செலுத்திய அந்த தொகுதி மக்களுக்கு நன்றிகளை சொல்லி கொண்டிருக்கிறாராம் செல்லபாண்டியன்..!!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications