'100 நாள் வேலை' திட்டம்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு
சென்னை: 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், முறைகேடுகளை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது.
கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலை திட்டம்) நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. குளங்களை தூர்வாருவது,கால்வாய்களை பராமரிப்பது, அரசுக்கு சொந்தமான காடுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது என பல்வேறு அரசு சார்ந்த பணிகளுக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.

ஆனால் இந்த திட்டத்தில் வேலையே செய்யாமல் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. அத்துடன் 100 நாள் வேலை திட்டத்தில் வேலைக்கே வராதவர்களின் பெயரை சேர்த்து, பணத்தை முறைகேடு செய்வதாக புகார் உள்ளது. இந்நிலையில் இத்தகைய புகார்களை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை தொடர்புடைய கிராம சபையின் வாயிலாக சமூக தணிக்கை செய்திடும் பணியானது தமிழ்நாடு சமூகத் தணிக்கை சங்கத்தின் மூலம் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பான புகார்களை தெரிவித்திட மாநில மற்றும் மாவட்ட அளவில் குறைதீர்க்கும் அலுவலரை நியமிக்கவும், இதன் பொருட்டு குறைகளை தெரிவிப்பதெற்கென கட்டணமில்லா தொலைபேசி எண், வாட்ஸ்அப் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பொதுமக்களுக்கு தெரிவிக்கவும் அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு மாநில சமூக தணிக்கை சங்கத்தைச் சார்ந்த இணை இயக்குநர் (தெற்கு மண்டலம்) மாநில குறை தீர்க்கும் அலுவலராகவும், மாவட்ட அளவில் அந்தந்த மாவட்ட வள பயிற்றுநரை மாவட்ட குறை தீர்க்கும் அலுவலராகவும் நியமித்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
எனவே, பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சமூகத் தணிக்கை தொடர்பான புகார்கள் அல்லது குறைகளை தெரிவித்திட கட்டணமில்லா தொலைபேசி எண். 18004252152-யை தொடர்புகொள்ளுமாறும், மேலும் இது தொடர்பான மாவட்ட வாரியான குறைதீர்க்கும் அலுவலர்கள் குறித்த விபரங்கள், வாட்ஸ்அப் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை tnrd.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது" இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications