பறக்கும் படை சோதனையில் சிக்கிய 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள்.. கூடவே திமுக வேட்பாளர் படம்!
சென்னை: சென்னையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் அதிரடி சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிக்கியுள்ளன. ஒரத்தநாடு சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் வைத்திலிங்கம் படத்துடன் கூடிய கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழ்நாட்டில் வரும் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. இதற்கிடையே காவல்துறையுடன் இணைந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அண்ணாநகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அரும்பாக்கம் 100 அடி சாலையில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அதில் 100 டம்மி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) இருந்தது தெரியவந்தது.
மேலும், திமுக ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் வைத்திலிங்கத்தின் புகைப்படங்கள் அடங்கிய கார்டுகள் கொண்ட 5 பார்சல்கள் இருந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தேர்தல் பறக்கும் படையினர் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவற்றை அண்ணாநகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர். விசாரணையில் பார்சல் கொண்டு சென்ற நபர் சேலத்தைச் சேர்ந்த செல்வம் என்பதும், ஆட்டோ ஓட்டி வந்தவர் அண்ணா நகரைச் சேர்ந்த கணேசன் என்பதும் தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட டம்மி இவிஎம் இயந்திரங்களை தனியார் பேருந்து மூலம் ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதிக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டு இருந்ததும், வாக்கு சேகரிப்பின்போது வைத்திலிங்கம் புகைப்படம் ஒட்டிய இந்த டம்மி மிஷினை காட்டி வாக்கு சேகரிக்க திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.
இந்த விவகாரம் ஒரத்தநாடு சட்டசபை தொகுதிக்கு உட்பட்டது என்பதால் அந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டம்மி மெஷின்கள் காட்டி வாக்கு சேகரிப்பது தொடர்பான முறையாக அனுமதியும், இதுகுறித்து வாக்காளர் செலவினங்களில் காண்பிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அதிமுக ஆட்சி இல்லையாம்.. "தமிழகத்தில் என்டிஏ அரசு அமையும்!" திட்டவட்டமாக சொன்ன பாஜக தேசிய தலைவர் -
திமுக-வா, ஆதவ் அர்ஜுனாவா? ஜனநாயகன் 'லீக் மாஸ்டர்' இவரா..வினோஜ் செல்வம் கிளப்பிய அந்த 1 பகீர் சந்தேகம் -
4,379 ஓட்டு ஷாக்! விஜய பிரபாகரன் அப்போ அப்படி பேசிட்டு.. விருதுநகரில் நடந்த அந்த ரகசிய சமரசம் என்ன -
ஸ்டாலின், விஜய் தொகுதிகளை விடுங்க.. ரெக்கார்டு படைக்கும் கரூர்.. தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்கள்! -
ABP survey: திமுக கூட்டணி 170+ இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்குமாம்! பரபரக்கும் சர்வே! -
ஸ்டாலினா? எடப்பாடியா? உண்மையிலேயே யார் 'கெத்து'? ரெக்கார்டு என்ன சொல்லுது? -
சுயேச்சைகளே இல்லை.. வெறும் 5 பேர்தான்! தமிழகத்தில் குறைவான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி இதுதான் -
சென்னையில் எந்தெந்த சமூகத்தினருக்கு எம்.எல்.ஏ சீட்? திமுக பிரதிநிதித்துவ ஃபார்முலா! -
ஹெலிகாப்டரில் பறந்த அண்ணாமலை.. தரையிறங்கியதும் சுத்துப்போட்ட அதிகாரிகள்! என்ன நடந்தது? பரபரப்பு -
முதலில் தமிழன், அப்புறம் தான் இந்து! மேலூர் பாஜகவை அதிரவிட்ட வார்த்தை.. பின்னணியில் விகே பாண்டியன்? -
‘டியூசன் அக்கா’ திட்டத்தை வாக்குறுதியாக அறிவித்த காங்கிரஸ்.. அப்படினா என்ன? மாணவர்களுக்கு ஜாக்பாட் -
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2000.. டியூஷன் அக்கா திட்டம்.. மேஜர் வாக்குறுதிகளை வெளியிட்ட காங்கிரஸ்!












Click it and Unblock the Notifications