சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளருக்கு 100 கிலோ ஆப்பிள் மாலை.. அடுத்த ஐந்து நிமிடத்தில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். அரவிந்த் ரமேஷ், கோவிலம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது , வேட்பாளரை வரவேற்கும் விதமாக கிரேன் மூலம் சுமார் 100 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட ஆப்பிள் மாலை வேட்பாளருக்கு அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 60 கிலோ எடையுள்ள சாக்லேட் மாலை மற்றும் வீரவாள் வழங்கியும் தொண்டர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். அடுத்த ஐந்து நிமிடத்தில் மொத்தமாக ஆப்பிள் மாலை காலியானது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்களுக்கு அளிக்கப்படும் நூதன வரவேற்புகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். அரவிந்த் ரமேஷ், கோவிலம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

100 kg Apple Garland Presented to the DMK Candidate in Sholinganallur A Twist Within 5 Minutes

கோவிலம்பாக்கம் பிரதான சாலையில் பிரச்சாரம் மேற்கொண்ட, இப்பொழுது கோவிலம்பாக்கம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் திரண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது , வேட்பாளரை வரவேற்கும் விதமாக கிரேன் மூலம் சுமார் 100 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட ஆப்பிள் மாலை வேட்பாளருக்கு அணிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 60 கிலோ எடையுள்ள சாக்லேட் மாலை மற்றும் வீரவாள் வழங்கியும் தொண்டர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். வேட்பாளர் தனது பிரச்சாரத்தை முடித்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்த அடுத்த சில நிமிடங்களிலேயே, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் அந்த ஆப்பிள் மாலையை நோக்கி படையெடுத்தனர்.

சற்று எதிர்பாராத நேரத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு ஆப்பிள்களைப் பறிக்கத் தொடங்கினர். வெறும் ஒரு நிமிடத்திற்குள் 100 கிலோ ஆப்பிள்களும் முழுமையாகப் பறித்துச் சென்றனர். வேட்பாளருக்காக கொண்டு வரப்பட்ட பிரம்மாண்ட மாலை, பொதுமக்கள் பறித்துச் சென்ற சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியின் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதியாகும்.இங்கு திமுக, அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+