அப்புறம் எங்களுக்கும் காங்கிரசுக்கும் என்ன வித்தியாசம்? அதிமுக உடன் கூட்டணி இல்லை! திமுக திட்டவட்டம்
சென்னை: இதுவரை தமிழகம் அறியாத பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது தற்போது வெளிவரும் செய்திகள். தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதை தவிர்க்க திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் நாங்கள் காங்கிரஸ் கிடையாது அதிமுகவுடன் துளி அளவும் சமரசத்திற்கு இடம் கிடையாது என சொல்கின்றனர் திமுகவினர்.
கடந்த சட்டமன்ற தேர்தல்களைப் போல் அல்லாமல் இந்த சட்டமன்ற தேர்தல் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருக்கிறது. விஜய் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் உலாவின.
முதல் கட்சியாக காங்கிரஸ் ஐந்து எம்எல்ஏக்கள் கையெழுதிட்ட கடிதத்தை விஜய்க்கு வழங்கியது. அதை வைத்து தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் இடம் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறார் விஜய்.
இந்த நிலையில் தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அதிமுக திமுக இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்க்கு ஆதரவே இல்லை என அதிமுகவின் கேபி முனுசாமி தெரிவித்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி திமுக உடன் கூட்டணி சேர தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் விசாரித்த போது திமுக கூட்டணியில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த போது எங்கள் தலைவர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்
திமுகவை பொருத்தவரை மத்திய அரசில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமிழக மக்கள் நலனை கருத்தில் கொண்டு மிக தீவிரமாக எதிர்த்து வருகிறோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உடன் கூட்டணி சேர்ந்த போது மதச்சார்பற்ற சாதி சமயமற்ற கட்சிகள் உடன் தான் கூட்டணி சென்றோம்
ஆனால் அதிமுக பாஜக பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. இந்தச் சூழலில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக அதிமுகவுடன் கூட்டணி சேருவோம் என்பது கட்டுக்கதை. ஒரு போதும் பாசிச பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுகவுடன் கூட்டணி சேரவே மாட்டோம் என அடித்துச் சொல்கின்றனர் திமுகவின் சீனியர்கள்
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா












Click it and Unblock the Notifications