"பிடிஆர்".. 3 திமுக அமைச்சர்களை "லாக்" போடும் பாஜக?.. மேலிடத்துக்கு "ஷோ".. எகிறும் செந்தில் பாலாஜி
கோவையில் பாஜக வளர்ச்சி என்பதே கிடையாது என செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்
சென்னை: லைம்லைட்டில் பாஜக இருக்க வேண்டும் என்பதற்காகவும், மேலிடத்துக்கு தங்கள் செயல்பாடுகள் தெரிய வேண்டும் என்பதற்காகவும், திமுகவில் 3 அமைச்சர்கள் குறி வைக்கப்படுகிறோம் என்று செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டி உள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், மின்கட்டண உயர்வு சலசப்புகள், திமுகவின் திராவிட மாடலில் மின்சார துறையின் பங்கு, மேற்கு மண்டலம் திமுகவின் மண்டலமாக மாறிவருவது குறித்தெல்லாம் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்
குறிப்பாக, அதிமுக ஆட்சிக்காலத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது குறித்தும், தற்போதைய தமிழகத்தின் மின்வாரிய சூழல் குறித்தும் புள்ளிவிவரங்களுடன், முழு தரவுகளையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

நொறுங்கும் கணக்கு
அப்போது, "திமுக அமைச்சர்கள் செந்தில்பாலாஜியும், பிடிஆரும் ஏன் தொடர்ந்து குறி வைக்கப்படுகிறார்கள்? செந்தில்பாலாஜி மீது தொடர்ந்து விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைப்பதால், இதை வைத்து அவர் மீதான இமேஜை பாஜக நொறுக்க பார்க்கிறதா? இதை வைத்து கொங்குவில் தங்கள் கட்சியை பாஜக வளர்க்க நினைக்கிறதா?" என்றெல்லாம் நம் அவரிடம் கேள்விகளை முன்வைத்தோம்.. இதுகுறித்து செந்தில் பாலாஜி நமக்கு அளித்த பதில்கள் இதுதான்:

பூரிப்பு + குஷி
"முதல்வரின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் நிறைய வரவேற்பு இருக்கிறது.. கரூர் மாவட்ட நிகழ்ச்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒருமுறை வந்திருந்தார்.. அப்போது கேரளாவை சேர்ந்த சிலர் கோயிலுக்கு சாலையில் சென்று கொண்டிருந்தார்கள்.. முதல்வரை பார்த்ததுமே அவரது வாகனத்தை நிறுத்தி, தங்கள் கோரிக்கையை சொன்னார்கள்.. சிறப்பான ஆட்சியை செய்கிறீர்கள், உடம்பை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அக்கறையுடன் சொல்லி, பாராட்டிவிட்டு சென்றார்கள்.

விமர்சனங்கள்
எனவே, ஒரு அரசு மீது குறை சொல்பவர்கள் யாராக இருந்தாலும், அந்த குறை சரியா? தவறா? என்ன ஆதாரத்துடன் அந்த குறைகளை சொல்கிறோம்? என்று தெரிந்து கொண்டு பேச வேண்டும்.. அப்படி குறை சொல்லும்போதே, அது சரி செய்யப்பட வேண்டும் என்று நோக்கத்தில் அதற்கான தீர்வையும் சிலர் சொல்வார்கள்.. இவைகளை அரசும் பரிசீலித்து ஏற்றுக் கொள்ளும்.. இது ஒருவகையான ஆரோக்கியமான விமர்சனம்.

நோட்டா
ஆனால், நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் எல்லாம் விமர்சனம் வைக்கிறார்கள்.. இந்த அரசு மீது விமர்சனம் வைத்தால், சோஷியல் மீடியாவிலோ அல்லது பத்திரிகைகளிலோ அல்லது தொலைக்காட்சியிலோ தாங்கள் வருவோம், தங்களை முன்னிலைப்படுத்துவார்கள் என்று நினைத்து கொண்டு இந்த விமர்சனங்கள் செய்கிறார்கள். ஒரு பொறுப்பில் இருக்கிறோம் என்பதற்காகவே, ஒரு மாவட்ட தலைவருக்கோ, ஒரு மாநில தலைவருக்கோ, மீடியாவில் முக்கியத்துவம் தர வேண்டும், சமூக வலைதளங்களில் முக்கியத்துவம் என்று நினைப்பது நீதியா? அது ஏற்புடையதா?

லைம்லைட்
ஒரு தேசிய கட்சியாக இருந்தாலும்கூட, மாநிலத்தில் நமக்கு என்ன வாக்கு வங்கி இருக்கிறது? நாம் எத்தனை சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கிறோம்.. உள்ளாட்சியில் எத்தனை இடங்களில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.. இதையெல்லாம் கவனத்தில் வைத்துக் கொண்டு, இயக்கம் வளர்ப்பதற்கான பணிகளை முன்னெடுத்து சென்றால் நல்லா இருக்கும்.. ஒருவர் மீது குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்து கொண்டு, சமூக வலைதளங்களிலும் , டிவியிலும், பத்திரிகைகளிலும் தங்கள் போட்டோ, செய்திகள் வந்தால் போதும் என்ற நினைக்கிறார்கள்.. அதனால், இதெல்லாம் லைம்லைட்டுக்காக செய்கிறார்கள்.

மேலிடம்
ஒரு ஆளுநரை சந்தித்து, என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தருகிறார்கள்.. ஆனால், என் மீதான புகார் உண்மையாக இருந்தால், கோர்ட்டுக்கே போக வேண்டியதுதானே? இதுக்கு காரணம், அன்றைய தினம் இவர்களை பற்றி செய்தி வர வேண்டும், அவ்வளவுதான்.. அதனால் சொல்ல வரும் கருத்துக்கள், அல்லது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் உங்களிடம் இருந்தால், நீதிமன்றத்துக்கே செல்லலாம்.. பொதுவெளியில் சொல்வது எல்லாம் ஆதாரமில்லாமல் வெற்று விளம்பரத்துக்காகவே.. நானும் இங்கு செயல்படுகிறேன், நானும் இங்கு கட்சியை வளர்க்கிறேன் என்பதை "மேலிடத்துக்கு" புரிய வைப்பதற்காகவே இப்படி செய்கிறார்கள்.

பிடிஆர் + மா.சு.
நிதியமைச்சர் கார் மீது காலணி வீச்சு சம்பவம் நடந்ததே.. அதையொட்டி ஒரு ஆடியோவும் வந்ததே.. அதை பேசியவர்களும் தாங்கள்தான் அந்த ஆடியோவில் பேசினோம் என்பதையும் ஒப்புக் கொண்டார்களே.. எவ்வளவு மட்டரகமான அரசியல் இது.. ஒரு நிதியமைச்சர் அஞ்சலி செலுத்த சென்றால்கூட, அதையும் இவர்கள் அரசியலாக்க பார்க்கிறார்கள், அதையும் விமர்சனம் செய்து இயக்கத்தை வளர்க்க நினைக்கிறார்கள். என் மீதோ, பிடிஆர் அண்ணன் மீதோ, மா.சு. அண்ணன் மீதோ, இப்படி ஒரு குறிப்பிட்ட சிலர் மீது மட்டும் மலிவான அரசியலை முன்வைக்க காரணம், யாரை சொன்னால் அந்த செய்திக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்பதை அறிந்து அந்த குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்.

100+ வார்டு
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, 100 வார்டுகளில் குறைந்தபட்சம் 12 வார்டுகளிலாவது எப்படியாவது வெற்றியை கைப்பற்றி விட வேண்டும்என களத்தில் இறங்கி பணியாற்றினார்கள்.. தீயாய் வேலை செய்தனர்.. ஆனால், ஒன்றில்கூட ஜெயிக்கமுடியல.. ஓட்டுவங்கியும் எதிர்பார்த்த அளவுக்கு பெற முடியவில்லை.. வெற்றி வாய்ப்பு இல்லாத இடத்தில் இவர்கள் இயக்கம் வளர்வதை போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்" என்றார்.
-
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
காங்கிரஸ் உண்டு கொழிக்கும் ஒட்டுண்ணி! பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்! வெளுத்த திமுக -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத் -
50 ஆண்டு விசுவாசம்! திருப்பூரில் கழகத்திற்குள் கலவரம்.. விலகிய மா.செ மீண்டும் திமுகவில் ஐக்கியம்! -
மகன் அறநிலைய அமைச்சர்.. ஆனாலும் சமையல் வேலை செய்யும் தாய் - பூசாரி பணியில் தந்தை.. ரமேஷின் பின்னணி -
வசமாக சிக்கிய அனிதா ராதாகிருஷ்ணன்? வழக்கு தொடர அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம்.. விஜய் கையில் முடிவு












Click it and Unblock the Notifications