தமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்
சென்னை: தமிழகத்தில் 0- முதல் 12 வயதுக்கு உட்பட்ட 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 532 ஆண் குழந்தைகளும், 416 பெண் குழந்தைகளும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேரில் 464 பேர் ஆண்கள், 301 பேர் பெண்கள் ஆவர், ஒட்டுமொத்தமாக 16,277 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் 10340 ஆண்களும், 5932 பெண்களும், 5 திருநங்கைகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
தற்போதைய நிலையில் 5643 பேர் கொரோனா அறிகுறிகளுடன் ஐசலேசன் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 7839 பேர் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

13 வயது முதல் 60 வயது வரை 13916 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8958 பேர் ஆண்கள் ஆவர். 4953 பேர் பெண்கள் ஆவர். தமிழகத்தில் 60வய கடந்த 1358 பேர் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 840 பேர் ஆண்கள். 518 பேர் பெண்கள் ஆவர்.
தமிழகத்தில் கொரோனாவல் இன்று 8 பேர் இறந்த நிலையில் அதில் 7 பேர் ஆண்கள் ஆவர். ஒருவர் மட்டுமே பெண் ஆவர். ஒட்டுமொத்தமாக பார்த்தாலும் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் இறந்துள்ளனர்.
சிறுவயது குழந்தைகளில் 1003 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் எத்தனை குழந்தைகள் இதுவரை கொரோனாவால் இறந்துள்ளார்கள் என்பது குறித்து விவரங்களை அரசு வெளியிடவில்லை. எனினும் இதுவரை வந்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. உயிரிழப்பும் ஒற்றை இலக்க அளவில் தான் இருக்கும் என தெரிகிறது.
குழந்தைகளுக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் கொரோனவால் அவர்கள் ஒருவேளை பாதிக்கப்பட்டாலும் விரைவில் குணம் அடைந்துவருகிறார்கள். தாய் மற்றும் தந்தை வழியாகவே குழந்தைகளுக்கு அதிக அளவில் கொரோனா பரவி இருக்கிறது.
எனவே குழந்தைகளுக்கு கொரோனா பரவாமல் இருக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் அரசு சொன்னபடி 14 நாட்கள் தனித்து இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications