நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழர்கள்.. விஜய் போட்ட ஆர்டர்! டெல்லி விரைந்த தமிழக அமைச்சர்கள் குழு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் விதமாக முதல்வர் விஜய் உத்தரவின் பேரில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் மற்றும் அயலகத் தமிழர்நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை இயக்குநர் சதீஸ், ஆகியோர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு புறப்பட்டுள்ளனர். தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் வகையில், டெல்லி தமிழ்நாடு இல்ல ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையிலான குழுவினர் புறப்பட்டுள்ளனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் ஒட்டு மொத்த உலகையே அதிர வைத்துள்ளது. நேபாள வெள்ள பாதிப்பால் தற்போது வரை 359 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 800 க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். மாயமாகியுள்ளவர்களில் இந்தியர்களும் அடங்குவர்.

Nepal

தமிழ்நாட்டைச் சேர்ந்த 103 நபர்கள் கைலாஷ் யாத்திரைக்காக இரண்டு குழுக்களாக சென்ற நிலையில், அதில் முதல் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 54 நபர்களும், புதுச்சேரியைச் சேர்ந்த 3 நபர்களும் என மொத்தம் 57 நபர்களும், இரண்டாவது குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 49 நபர்களும் இடம்பெற்றிருந்தனர்

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமை செயலலகத்தில் இன்று முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

''தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் வகையில், டெல்லி தமிழ்நாடு இல்ல ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையிலான குழுவினர் நேபாள நாட்டிற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்திடவும், அவர் மீட்கப்பட்டுள்ள 20 தமிழர்களை உடனடியாக தாயகம் அழைத்து வருவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்திடவும், மேலும் தொடர்பு கொள்ள இயலாதவர்களின் நிலையினைக் கண்டறிந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்திடவும், தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிடவும் விஜய் உத்தரவிட்டார்.

அதுமட்டுமின்றி அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் மற்றும் அயலகத் தமிழர்நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை இயக்குநர் சதீஸ், ஆகியோர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முகாமிட்டு, மீட்புப் பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதுடன், நேபாளத்திலிருந்து மீட்கப்பட்ட தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் அவர்களைப் பத்திரமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.

இதையடுத்து அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் உள்ளிட்டோர் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+