வேலூரில் ஆவேசமாக பேசிய எடப்பாடி பழனிசாமி.. டிஜிபி ஆபீஸில் புகார் அளித்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
சென்னை: வேலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர் கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி பேசிய போது 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதனை திட்டமிட்டு திமுக இதுபோன்ற அதிமுக கூட்டங்களின் போது நெரிசலை ஏற்படுத்தும் வகையில் அனுப்புவதாக கூறியிருந்தார். மேலும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனரை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது.இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மீது 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
வேலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர் கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி பேசிய போது 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதனை திட்டமிட்டு திமுக இதுபோன்ற அதிமுக கூட்டங்களில் போது நெரிசலை ஏற்படுத்தும் வகையில் அனுப்புவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

அது மட்டுமல்லாமல் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனரை அச்சுறுத்தும் வகையில் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் இருளாண்டி பேசுகையில், "எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டி இருக்கிறார். அச்சுறுத்தும் வகையில் அவர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. எடப்பாடி பழனிச்சாமி அந்த பொதுக்கூட்டத்தில் மிரட்டும் வகையில் பேசிய பிறகு தான், அங்கிருந்த அதிமுகவினர் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அச்சுறுத்தும் வகையில் மிரட்டி இருக்கின்றனர்.
மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் ஐடி கார்டு முதலியவற்றை பிடித்து இழுத்து ஆம்புலன்ஸ் வண்டி அங்கிருந்து செல்லாத வகையிலும் செயல்பட்டுள்ளனர். மக்களுக்கான உன்னதமான பணியை இரவு பகல் பாராமல் உதவி வரும் எங்களைப் போன்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு இதுபோன்ற சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ஊழியர்கள் மத்தியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
எனவே பல்வேறு சட்ட பிரிவுகளின் அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று புகார் மனு அளித்துள்ளோம். ஏற்கனவே தமிழகம் முழுவதும் மதுரை திண்டுக்கல் நீலகிரி என பல இடங்களில் புகார் மனு அளித்திருக்கிறோம். இனி வரக்கூடிய நாட்களில் எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வழியாக இயக்கினால் ஊழியர்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே தமிழக காவல்துறை 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.
தொடர்ந்து பேசியவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இந்த செயலுக்கு பொது மேடையில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் . முதலமைச்சர் துணை முதலமைச்சர் என யாருடைய கூட்டமாக இருந்தாலும் ஆம்புலன்ஸ் வரத்தான் செய்யும். எனவே இனி 108 ஆம்புலன்ஸ்க்கு இடையூறு இல்லாமல் கூட்டங்களை எந்த கட்சியாக இருந்தாலும் நடத்த வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை" இவ்வாறு தெரிவித்தார்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின்












Click it and Unblock the Notifications