இன்றும் நாளையும் வெளியே போனால் ரோஸ்ட்தான்.. 108 டிகிரி செல்சியஸ் கொளுத்துமாம்! வானிலை மையம்
சென்னை: தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): திருப்பத்தூர் (சிவகங்கை) 4, வெள்ளக்கோவில் (திருப்பூர்), அவினாசி (திருப்பூர்), உசிலம்பட்டி (மதுரை), அன்னவாசல் (புதுக்கோட்டை), சிவகங்கை தலா 3, அருப்புக்கோட்டை (விருதுநகர்), மானாமதுரை (சிவகங்கை), இலுப்பூர் (புதுக்கோட்டை) தலா 2, கங்கவல்லி (சேலம்), பாடலூர் (பெரம்பலூர்), நிலக்கோட்டை (திண்டுக்கல்), அரவக்குறிச்சி (கரூர்), ஊத்துக்குளி (திருப்பூர்), முசிறி (திருச்சி), வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), ஊட்டி தலா 1.

அதிகபட்ச வெப்பநிலை: மதுரை விமான நிலையத்தில் 40.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது.
ஜூன்5: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
ஜூன்6: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
ஜூன் 7 முதல் 9 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை: ஜூன் 5 மற்றும்6 ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும்.
குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29- 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஜூன்5, 6 குமரிக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்றஉ மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக் கடல் பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும்.
ஜூன்7, 8: குமரிக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும்.
தெற்கு வங்கக் கடல் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும்.
ஜூன் 9: குமரிக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும். வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும்.
அதாவது தமிழகத்தில் இரு தினங்களுக்கு 108 டிகிரி வெயில் கொளுத்தும். தமிழகம், புதுவையில் அதிகபட்சமாக 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். சென்னையில் அதிகபட்சமாக 40, 41 டிகிரி வெப்பநிலை பதிவாகும்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications