"ரெடி, ஸ்டார்ட்".. 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு.. விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் ஆரம்பம்
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்
சென்னை : தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.. அதேபோல, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9ம் தேதி தொடங்குகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 23ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடனும் முடிவடைந்தது...
தமிழக பள்ளிகளில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மே 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 3 வாரமாக நடத்தப்பட்டு வந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 28ம் தேதி நிறைவு பெற்றது..

இன்று ஆரம்பம்
இதையடுத்து, பிளஸ்-2 விடைத்தாள் திருத்துதல் பணிகள் இன்று முதல் அதாவது ஜுன் 1 முதல் 8-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளன. இதில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர். அதைத் தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் ஜுன் 23-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

ரிசல்ட் எப்போது?
அதேபோல, தமிழகத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வை சுமார் 9.93 லட்சம் மாணவர்கள் எழுதினர்.. கடந்த 30-ம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன.. இதைத் தொடர்ந்து, இம்மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகளும் இன்று தொடங்கி உள்ளன.. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள், திருத்துதல் மையங்களுக்கு மே 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.

விடைத்தாள்கள்
தொடர்ந்து ஜுன் 1 முதல் 9-ம் தேதி வரை திருத்துதல் பணிகள் நடைபெறவுள்ளன. இதில் 55 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர். மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து தேர்வு முடிவுகள் ஜூன் 17-ல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதனிடையே, அதேபோல, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9ம் தேதி தொடங்குகிறது. ஜுன் 9 முதல் 17-ம் தேதி வரை திருத்துதல் பணிகள் நடைபெறும். இதில் அரியர் பாடத்தேர்வு விடைத்தாள்கள் ஜுன் 10, 11-ம் தேதிகளில் திருத்தி முடிக்கப்படும்.

வெளியீடு
இந்தப் பணிகளில் 48 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வு முடிவுகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜூலை 7-ல் வெளியிடப்படும். 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 83 மையங்களிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 86 மையங்களிலும் திருத்தப்படுகின்றன.. மேலும் மாணவர்களின் நலன் பாதிக்காமல் திருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்
இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வுக்கு 17,180 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.. ஆனால், தேர்வில் 16348 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.. 832 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.. எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில், பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய 2 இடங்களில் 4 மையங்களில் 10, பிளஸ்1, பிளஸ் 2 ஆகிய பாடங்களுக்கான தேர்வுத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடங்குகின்றன.. ஒரே வாரத்தில் தேர்வுத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடையும் என கூறப்படுகின்றன.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications