Tamil nadu 10th result 2025: 10ம் வகுப்பில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்.. முழு விவரம்
சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளிகளின் எண்ணிக்கை 12485 ஆகும். இவற்றில் மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 7555 ஆகும். அதேபோல் உயர்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 4930 ஆகும். மொத்தம் உள்ள 12455 பள்ளிகளில் 4917 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள் எண்ணிக்கை 1867 ஆகும்.
தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை : 871239
மாணவியர்களின் எண்ணிக்கை : 4,35,119
மாணவர்களின் எண்ணிக்கை : 4,36,120

தேர்ச்சி விவரங்கள்
தேர்ச்சி பெற்றவர்கள் : 8,17,261 (93.80%)
மாணவியர் 417183 (95.88%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்கள் 4,00,078 (91.74%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்களை விட 4.14 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள்: 15,652.
கடந்த மார்ச் / ஏப்ரல் 2024-ஆம் ஆண்டு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 894264.
தேர்ச்சி பெற்றோர் 8.18,743, தேர்ச்சி சதவிகிதம் 91.55%
கடந்த மார்ச் / ஏப்ரல் 2024 பொதுத்தேர்வினை விட இவ்வாண்டு தேர்ச்சி 2.25% சதவிகிதம் கூடுதலாக உள்ளது.
கூடுதல் விவரங்கள்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,485 இவற்றில் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை : 7,555 உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை : 4,930.
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை: 4,917.
100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை: 1,867.
பள்ளிகள் மேலாண்மை வாரியான தேர்ச்சி சதவிகிதம்
1. அரசுப் பள்ளிகள் 91.26%
2. அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.63%
3. தனியார் சுயநிதிப் பள்ளிகள் 97.99%
பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி சதவிகிதம்
1. இருபாலர் பள்ளிகள் 94.06%
2. பெண்கள் பள்ளிகள் 95.36%
3. ஆண்கள் பள்ளிகள் 87.84%
பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 7.52% சதவிகிதம் கூடுதலாகவும், இருபாலர் பயிலும் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 6.22% சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.















Click it and Unblock the Notifications